சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் 2025 ஒரு மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது. முதல் போட்டியில் இருந்து தற்போது வரை எதுவுமே சாதகமாக நடக்கவில்லை. இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளனர். மேலும் ப்ளே ஆப் வாய்ப்பை இழந்த முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து இரண்டு முறை பிளே ஆப் வாய்ப்பை இழந்தது இதுவே முதல் முறை. கடந்த சீசன் பிளே ஆப் செல்லவில்லை என்றாலும் இதுபோல மோசமாக விளையாடவில்லை. இப்படி தொடர்ச்சியான தோல்விக்கு மெகா ஏலத்தில் செய்த சில தவறுகளை காரணமாக அமைந்துள்ளது, இதனை அணி நிர்வாகமும் ஒப்புக் கொண்டுள்ளது.
மேலும் படிங்க: வன்ஷ் பேடி விலகல்… CSK-வில் இணைந்த இளம் சிங்கம்… யார் இந்த உர்வில் படேல்?
இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு எதிராக மட்டுமே இதுவரை வெற்றியை பெற்றுள்ளனர். அடுத்த ஆண்டு எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்று இப்போது இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் தயாராகி வருகிறது. காயம் காரணமாக வெளியேறிய வீரர்களுக்கு பதிலாக உடனடியாக மாற்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அவர்கள் அணிக்காக சிறப்பாக விளையாடியயும் வருகின்றனர். அப்படி அணிக்குள் வந்தவர்கள் தான் ஆயுஷ் மாத்ரே மற்றும் டெவால்ட் பிரீவிஸ். தற்போது மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்டரான ஊர்வில் படேல் அணியில் சேர்த்துள்ளார். மெகா ஏலத்தில் சென்னை அணி செய்த மூன்று தவறுகளை பற்றி பார்ப்போம்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
சென்னை சூப்பர் கிங்ஸ் செய்த மிகப்பெரிய தவறு ரவிச்சந்திரன் அஸ்வினை 9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அஸ்வின் மீது தனி நிர்வாகமும் ரசிகர்களும் அதிக நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் அஷ்வினால் சொந்த ஊரான சென்னை மைதானத்திலேயே விக்கெட்களை எடுக்க முடியவில்லை. அதே சமயம் ரன்களையும் வாரி வழங்கினார். சில போட்டிகளின் தோல்விக்கு இவரது பந்துவீச்சு முக்கிய காரணமாக அமைந்தது. அடுத்த ஆண்டு நடைபெறும் மினி ஏலத்தில் அஷ்வினை நீக்கிவிட்டு வேறு ஒரு இளம் வீரரை எடுக்கலாம் அல்லது அஸ்வினை இன்னும் குறைந்த விலையில் எடுக்க முயற்சிக்கலாம்.
ராகுல் திருப்பாதி
சென்னை சூப்பர் கிங்ஸ் செய்த அடுத்த மிகப்பெரிய தவறு ராகுல் திருப்பாதி . இந்த சீசன் முழுவதும் ஓப்பனிங் வீரராக களம் இறங்கிய ராகுல் திருப்பாதி வெறும் 55 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். ஆரம்பகட்டத்தில் சென்னை அணியின் தோல்விக்கு இவரது பேட்டிங்கும் ஒரு முக்கிய காரணம். சென்னை அணியின் வெற்றிக்கு எப்போதுமே டாப் ஆர்டர் வீரர்கள் முக்கிய காரணமாக இருப்பார்கள். ஆனால் இந்த முறை அது இல்லாமல் போனது தான் அதிகமான தோல்விக்கு காரணமாக அமைந்தது. மினி ஆக்சனில் கண்டிப்பாக ராகுல் திருப்பாதி நீக்கப்படுவார்.
தீபக் ஹூடா
அஸ்வின் மற்றும் ராகுல் திருப்பாதியை தொடர்ந்து மற்றொரு தவறான தேர்வு தீபக் ஹூடா. இந்த சீசனில் இவருக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதிலும் இதுவரை வரும் 31 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். மேலும் பில்டிங்கிலும் நிறைய கேட்சுகளை தவற விட்டுள்ளார். இவரது தேர்வு அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. இவர் இடத்தில் வேறு சில இளைஞர்களை சென்னை அணி விளையாட வைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
மேலும் படிங்க: பும்ரா இனி இந்தியாவின் துணை கேப்டன் கிடையாது.. பிசிசிஐ அதிரடி!