துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி ஏப்ரல் மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
அதன்படி சிறந்த வீரருக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் ஜிம்பாப்வேயின் பிளெசிங் முசரபானி, வங்காளதேசத்தின் மெஹதி ஹசன் மிராஸ், நியூசிலாந்தின் பென் சியர்ஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் ஸ்காட்லாந்தின் கேத்ரின் பிரைஸ், வெஸ்ட் இண்டீஸின் ஹேலி மேத்யூஸ், பாகிஸ்தானின் பாத்திமா சனா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.