இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2 ஆண்டுகளில் 2 உலக கோப்பையை கைப்பற்றி உள்ளது. டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியை வென்று கோப்பையை கைப்பற்றியது. ஆனால் டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து செளதப்பி வருகிறது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அடுத்தடுத்து மோசமான தோல்விகளை இந்திய அணி சந்தித்திருந்தது. இத்தொடர்களில் மூத்த வீரர்கள் பெரிதாக ரன்கள் சேர்க்காததே தோல்விகளுக்கு காரணமாக இருந்தது. அதனால் ரோகித் சர்மா மற்றும் கோலி ஆகியோரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி போட்டியில் ரோகித் சர்மா தாமாகவே முன்வந்து கேப்டன் பதிவில் இருந்து விலகி இருந்தார். இந்த நிலையில், 2025 ஐபிஎல் தொடர் முடிந்த உடன் இந்தியா இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் விளையாட உள்ளது. இச்சூழலில் இந்த டெஸ்ட் தொடருக்கான கேப்டனாக அணியை யார் வழிநடத்துவார் என்ற கேள்வி எழும்பி உள்ளது. இதற்கான அலோசனைகளும் நடந்து வருகிறது.
ஒருவேளை ரோகித் சர்மாவை மீண்டும் கேப்டனாக நியமித்தாலும், அவர் 2027 வரையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முழுவதும் விளையாடுவாரா என்பது சந்தேகமே. இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முழுவதும் ஒரே கேப்டனாக தான் இருக்க வேண்டும் என்பதில் பயிற்சியாளர் கெளதம் காம்பீர் உறுதியாக உள்ளார். இந்த நிலையில், இந்திய அணியை ஏற்கனவே வழிநடத்திய ஒரு மூத்த வீரர் தனது கேப்டன் பதவி தருமாறு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
நிரந்தர கேப்டனை நியமிக்கும் வரை இந்திய அணியை வழிநடத்துவதாக கேட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பிசிசிஐ தற்காலிக கேப்டனை நியமிக்க விரும்பம் இல்லை என மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வீரர் ரோகித் விராட் கோலியாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது. ஏனென்றால், ஆஸ்திரேலியாவின் தொடரின்போதே விராட் கோலி கேப்டன் பதவி கேட்டதாக ஒரு பேச்சு அடிப்பட்டது. எனவே அவர் பிசிசிஐயிடன் கேட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் படிங்க: ஐபிஎல் 2025 உடன் தோனி ஓய்வு உறுதி! இந்த சீசன் விளையாடுவதற்கே இதுதான் காரணம்!
மேலும் படிங்க: மழையால் வந்த வினை.. தொடரை விட்டு வெளியேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!