சந்தையில் உள்ள பிரசத்தி பெற்ற எம்ஜி நிறுவன வின்ட்சர் இவி அடிப்படையில் 52.9Kwh பேட்டரி பெற்ற வின்ட்சர் இவி புரோ அறிமுக சலுகை விலை ரூ.17,49,999 (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டு சிங்கிள் சார்ஜில் 449 கிமீ வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் 8,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அறிமுக சலுகை விலை செல்லுபடியாகும், மேலும் முன்பதிவுகள் மே 8, 2025 அன்று ஆன்லைனில் தொடங்கும். முதல் உரிமையாளருக்கு வாழ்நாள் பேட்டரி உத்தரவாதத்தையும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 60% உறுதியான பைபேக்கையும் எம்ஜி உறுதிப்படுத்தியுள்ளது.
MG Windsor EV Pro
52.9kWh பேட்டரி கொண்ட மாடலில் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 449 கிமீ (ARAI) வரை கிடைக்கும் என உறுதிப்படுத்தப்பட்டு 136PS அல்லது 100KW பவர் வழங்கும் PMSM மோட்டார் ஆனது 200 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.
வின்ட்சர் EV ப்ரோ 7.4kWh AC சார்ஜருடன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 9.5 மணிநேரம் ஆகும். மேலும், 60kW DC வேகமான சார்ஜிங் ஆதரவுடன் வெறும் 50 நிமிடங்களில் 20 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது.
வழக்கமான வின்ட்சர் இவி காரை விட மாறுபட்ட 18 அங்குல அலாய் வீல் டிசைனை பெற்று, புதிதான அப்ஹோல்ஸ்ட்ரி கொண்டு, டேஸ்போர்டின் நிறங்கள் சிறிய அளவிலான மாறுதல்களை கொண்டு V2V, V2L, லெவல் 2 ADAS, 6 ஏர்பேக்குகளுடன் பாதுகாப்பு வசதி ஆகியவற்றுடன் வந்துள்ளது.
579 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்டுள்ள இந்த காரில் ப்ளூ, சிவப்பு மற்றும் சில்வர் என மூன்று நிறங்களை கொண்டுள்ளது.
BAAS எனப்படுகின்ற பேட்டரி வாடகை திட்டத்தின் கீழ் ரூ.12.50 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டு ஒரு கிமீ சார்ஜ்க்கு ரூ.4.50 கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. முழுமையாக பேட்டரியுடன் வாங்கினால் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.17.50 லட்சம் ஆக உள்ளது.