Amazon / Flipkart Summer Sale 2025: ஆன்லைன் விற்பனை தளங்களில் 2025 கோடைக்கால விற்பனை தொடங்கிவிட்டது. குறிப்பாக, பிரபலமான ஆன்லைன் விற்பனை தளங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் ஒரு பெரிய கோடைக்கால விற்பனை நடந்து வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு இந்த இரண்டு ஷாப்பிங் தளங்களிலும் மிகப்பெரிய சலுகைகள் கிடைக்கின்றன.
Smartphone: ஸ்மார்ட்போனில் மிகப்பெரிய சலுகைகள்
ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்தில் உள்ளவர்களுக்கு இந்த சேல் மிகப்பெரிய நன்மையை அளிக்கும். இவற்றில் கிடைக்கும் சலுகைகள் மூலம் வாடிக்கையாளர்கள் பெரிய அளவிலான தள்ளுபடிகளை பெற முடியும். அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் கிடைக்கும் சில சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளிபடிகள் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த விவரங்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் சிறந்த ஸ்மாட்போன்களை வாங்க முடியும்.
Apple iPhone 15: ஆப்பிள் ஐபோன் 15
இந்த சம்மரில் ஆப்பிள் ஐபோன் 15 போனை வாங்கும் எண்ணம் இருந்தால், இப்போது உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு வந்துள்ளது. இதை அனைவரும் இப்போது மிகவும் மலிவாக வாங்கலாம். இந்த ஐபோன் தள்ளுபடிக்குப் பிறகு பிளிப்கார்ட்டில் ரூ.63,999க்கு கிடைக்கிறது. அமேசானில் இதை ரூ.58,999க்கு வாங்கலாம்.
இது மட்டுமல்லாமல், அமேசானில் HDFC வங்கி கிரெடிட் கார்டு கொண்டு வாங்கினால், வாடிக்கையாளர்கள் இதில் ரூ.1,250 வரை கூடுதலாக சேமிக்கலாம். ஆப்பிளின் வலைத்தளத்தில் இந்த போனின் விலை தற்போது ரூ.69,900. அதாவது, போனை மலிவாக வாங்க அமேசான் ஒரு மிகப்பெரிய வாய்ப்பை வழங்குகிறது.
Samsung Galaxy S25 Ultra 5G: சாம்சங் கேலக்சி எஸ்25 அல்ட்ரா 6ஜி
இந்த Samsung போனை வாங்குவது இப்போது சுலபமாகிவிடும். இது இப்போது மிகப்பெரிய சலுகையில் கிடைக்கிறது. இந்த போன் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய ஈ-காமர்ஸ் தளங்களில் ரூ.129,999 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது, ஆனால் இந்த போன் இரு இடங்களிலும் வெவ்வேறு சலுகைகளுடன் கிடைக்கிறது.
பிளிப்கார்ட்டில் இதை 11 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில் வாங்கலாம். அமேசானில், HDFC வங்கி கிரெடிட் கார்டு மூலம் 11 ஆயிரம் ரூபாய் வங்கி தள்ளுபடி சலுகையுடன் இது கிடைக்கிறது.
Realme P3 Ultra 5G: ரியல்மீ பி3 அல்ட்ரா 5ஜி
இந்த ரியல்மி போனை நீங்கள் இரண்டு தளங்களிலும், அதாவது அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் வாங்கலாம். இதன் உண்மையான விலை ரூ.31,999. தள்ளுபடிக்குப் பிறகு அமேசானில் இதை ரூ.26,666க்கு வாங்கலாம். அதே நேரத்தில், தள்ளுபடிக்குப் பிறகு, பிளிப்கார்ட்டில் இதை ரூ.24,999க்கு வாங்கலாம். அதாவது, இந்த போனை வாங்க இந்த சேல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல வழியாக இருக்கும்.