Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை (மே 7) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதுகிறது. நடப்பு 18வது ஐபிஎல் தொடரில் இது 57வது லீக் போட்டி ஆகும்.
KKR vs CSK: பிளே ஆப் போகுமா கேகேஆர்?
ஐபிஎல் புள்ளிப்பட்டியலின்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) 10வது இடத்தில் இருக்கிறது. ஏற்கெனவே பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறிவிட்டது. இன்னும் 3 போட்டிகளில் வெற்றிபெற்றால் புள்ளிப்பட்டியலில் ஒரு நல்ல இடத்திற்கு வரலாம். மேலும் அடுத்தாண்டிற்கான காம்பினேஷனை கட்டமைப்பதில் சிஎஸ்கே அணி தொடர்ந்து ஆர்வம் காட்டும் எனலாம்.
மாறாக கேகேஆர் அணி பிளே ஆப் ரேஸில் ஊசலாடி வருகிறது. இன்னும் இருக்கும் 3 போட்டிகளிலும் வெற்றிபெற்று, ஓரளவு நல்ல நெட் ரன்ரேட் வைத்திருந்தால் மட்டுமே பிளே ஆப் செல்லும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு தோல்வி வந்தாலும் கேகேஆர் அணி பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறிவிடும். 6வது இடத்தில் உள்ளது கேகேஆர் அணி.
KKR vs CSK: கேகேஆர் பிளேயிங் லெவன் மாற்றம்
கேகேஆர் அணி அதன் காம்பினேஷனை கொஞ்சம் மாற்ற முயற்சிக்கும். மொயின் அலிக்கு பதில் அனுகுல் ராயை மீண்டும் கொண்டு வரலாம். வேறு மாற்றங்களுக்கு வாய்ப்பு குறைவு. கேகேஆர் அணி சுழற்பந்துவீச்சு வலையில் சிஎஸ்கேவை சிக்கவைத்து விக்கெட் வேட்டையாட திட்டம்போடும். அதைதான் சேப்பாக்கம் வந்தபோதும் கேகேஆர் அணி செய்திருந்தது. இப்போது சிஎஸ்கே சுதாரிக்குமா என்பதுதான் கேள்வியாக உள்ளது.
KKR vs CSK: அஸ்வினா…? நாகர்கோட்டியா…?
சிஎஸ்கே கடந்த சில போட்டிகளாகவே 2 சுழற்பந்துவீச்சாளர்களுடன்தான் களமிறங்குகிறது. அஸ்வினுக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. ஒருவேளை நாளை ஹூடாவுக்கு பதில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். இல்லையெனில், ஒரு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பதில் கமலேஷ் நாகர்கோட்டிக்கு வாய்ப்பு வழங்கலாம். அவர் 2020 சீசனில் கேகேஆர் அணிக்காக 9 இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதன்பின் பெரியளவில் வாய்ப்பை பெறவில்லை.
KKR vs CSK: கலீல் அகமது vs அன்ஷூல் கம்போஜ்
எனவே, அடுத்தாண்டு நாகர்கோட்டியை தக்கவைக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வாய்ப்புள்ளது. இதில் அன்ஷூல் கம்போஜிற்கு ஓய்வா, கலீல் அகமதிற்கு ஓய்வா என்பதே கேள்வியாக உள்ளது. கடந்த போட்டியை போல் ஆரம்பத்தில் ஸ்விங் ஆகிறது என்றால் அன்ஷூலுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு நாகர்கோட்டியை உள்ளே கொண்டுவர அதிக வாய்ப்பிருக்கிறது. இருப்பினும், கலீல் அகமதின் வேலைப்பளூவை கருத்தில் கொண்டு அவருக்கு ஓரிரு போட்டிகள் ஓய்வு வழங்கப்படலாம்.