அமிலம் ஊற்றி அழிக்க முயற்சி? – மரங்களின் மெளன குரல்கள் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

ஓரிடத்தில் நிலையாக நிற்பது என்று தான் மரத்தைப் பற்றிப் புரிதல் நமக்குள் உள்ளது. ஆனால், ஓரே நேரத்தில் விண்ணோடும் மண்ணோடும், ஏன் ஐம்பூதங்களோடுத் தொடர்புடைய ஓரே உயிர் மரங்களும் செடிகளும் மட்டும் தான்.

இயற்கையை தமிழ் சமூகம் அளவிற்கு புரிந்து கொண்டவர்கள் வேறு யாருமில்லை. இவ்வுலகில் எத்தனையோ நாகரிங்கள் தோன்றி வளர்ந்துள்ளன.

சிந்து சமவெளி நாகரிகம், நைல் நாகரிகம், சுமேரிய நாகரிகம், கீழடி நாகரிகம் என பண்டை நாகரிங்களைப் பற்றி பல்வேறு செய்திகள் நமக்குக் கிடைத்துள்ளன.

நம்மைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழலை அச்சத்துடன் பார்க்காமல் தோழமையுடன் பார்த்து, வாழ கற்க வேண்டும் அதற்கு சில எடு்த்துக்காட்டுகள் உள்ளன.

இவ்வுலகம் என்பதை யாரோ ஓருவர் படைத்தார், என்றல்லாது ஜம்பூதங்களின் சேர்க்கை தான் உலகம்.

”மண் திரிந்து நிலனும்” என்ற புறநானூற்றுப் பாடல் விளக்குகிறது. அறிவியல் உலகம் கண்டறிந்த மிகப்பெரிய ஒன்று ஆய்வகக் கருவிகள்.

ஒரு மரத்தை கட்டைத் துண்டாகவும், சில்லித் துணுக்குகளாகவும் பகுத்துக் கொண்டே சென்று கடைசியில் ஒன்றும் இல்லை என்று பொருள் வடிவில் முடிக்கிறது அறிவியல் மனம்.

ஆனால், ஒரு மரத்தைத் தனது உடன் பிறப்பாக இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் தோழனாகப் போற்றுகிறது தமிழர் மனம். இயற்கையைப் பாதுகாப்பது மனித இனத்தை பாதுகாப்பது போன்றதே ஆகும்.

உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. மாறி வரும் சுற்றுச்சூழலால் உலகம் எத்தகைய அபாயத்தை எதிர்நோக்க இருக்கிறது என்பதைப் பற்றி யாரும் சிந்திப்பதே இல்லை. தேவையில்லாமல் பல வருடங்களாக வாழும் மரங்களை நாமே அழிக்கின்றோம். நான் எப்போதும் இயற்கையுடனே பயணித்துக் கொண்டிருப்பவள்.

மரங்களை வெட்டும்போது என் நெஞ்சம் பதபதைக்கிறது. பூமியைக் காப்பாற்ற மரங்களால் மட்டுமே முடியும். நம் முன்னால் மரங்கள் எங்கும் தென்படுவதால்,அவை எவ்வளவு அற்புதமானவை என்பதைப் பற்றி நாம் எப்போதும் யோசிப்பதில்லை. யோசிக்க ஆரம்பித்தால் அதற்கு முடிவே இல்லை.

பட்டுப்போன மரங்களில் சிற்பம்:

     பல இடங்களில்  மரங்களை அமிலம் ஊற்றி அழிக்க முயற்சி நடைபெறுகிறது. இதனால் பல மரங்கள் பட்டுபோய் காணப்படுகிறது. ஒரு சில மரங்கள் பூச்சிகளால் பட்டுப்போயிருக்கிறது அல்லது சேதமாகிறது. வெளிநாடுகளில் ஒரு பெரிய சிற்பம் செய்து பராமரிப்பார்கள்.

புது முயற்சியாக சமீபத்தில் ஒன்றைப் பார்த்தேன்.எனது சொந்த ஊர் திருவண்ணாமலை. நெடுஞ்சாலைகளில் உள்ள மரத்தை எளிதாக அகற்றுவதுப்போல, எங்கள் ஊரில் மலைச் சுற்றும் பாதையில் பல்வேறு உயிரினங்களுக்கு நிழல் அளிக்கும் மரங்களையும் சாலை விரிவாக்கம் என்றப் பெயரில் மரங்களை வெட்ட ஆரம்பித்தபோது,எங்கள் ஊரில் இருக்கும் அனைத்து அமைப்பினரும் எதிர்த்துக் குரல் கொடுத்தனர். அதன் காரணமாக மரங்கள் தற்போது உயிர்ப்பெற்று வாழ்கிறது. பிறகு,எங்கள் ஊரில்  பட்டுபோய் உள்ள 62 மரங்களில் இப்போது மர சிற்பங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

இதில் இயற்கைகாட்சி,பறவைகள்,விலங்கினங்கள் என பல்வேறு விதமான வடிவத்தை மரச் சிற்பங்களாகச் செதுக்கி இன்று அழகூட்டுகிறது. இவையெல்லாம் மரங்களைத் துண்டுகளாக வெட்டி வைத்து,செதுக்குவது அல்ல.

நிற்கும் மரத்தில் அப்படியே அவற்றின் அகலம்,நீலம் ஆகியவற்றைக் கொண்டு எந்தவகையான சிற்பம் செதுக்கினால் பார்க்க நன்றாக இருக்கும் என்றும் திட்டமிட்டு, அது மட்டுமல்லாமல் அதற்கேற்ப சிற்பங்கள் செதுக்கப்படுகிறது. தமிழகத்தில் எங்கள் ஊரில் வைத்தது தான் முதல் முறையாகும்.மேலும்,இதற்கு பெரும்பாலும் பணத்தைச் செலவழிக்க மாட்டார்கள்.ஒரு மர சிற்பம் செய்ய ஒரு வாரமாவது ஆகும்.இங்கே பல விதமான வகையான மர சிற்பங்கள் எங்கள் ஊரின் மலைச்சுற்றும் பாதையில்  தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. 

பல இடங்களில் மரங்களை அமிலம் ஊற்றி அழிக்க முயற்சி நடைபெறுகிறது. இதனால் பல மரங்கள் பட்டுபோய் காணப்படுகிறது.ஒரு சில மரங்கள் பூச்சிகளால் பட்டுப்போயிருக்கிறது அல்லது சேதமாகிறது.வெளிநாடுகளில் ஒரு பெரிய சிற்பம் செய்து பராமரிப்பார்கள்.புது முயற்சியாக சமீபத்தில் ஒன்றைப் பார்த்தேன்.

எனது சொந்த ஊர் திருவண்ணாமலை.நெடுஞ்சாலைகளில் உள்ள மரத்தை எளிதாக அகற்றுவதுப்போல,எங்கள் ஊரில் மலைச் சுற்றும் பாதையில் பல்வேறு உயிரினங்களுக்கு நிழல் அளிக்கும் மரங்களையும் சாலை விரிவாக்கம் என்றப் பெயரில் மரங்களை வெட்ட ஆரம்பித்தபோது,எங்கள் ஊரில் இருக்கும் அனைத்து அமைப்பினரும் எதிர்த்துக் குரல் கொடுத்தனர்.

அதன் காரணமாக மரங்கள் தற்போது உயிர்ப்பெற்று வாழ்கிறது. பிறகு,எங்கள் ஊரில் பட்டுபோய் உள்ள 62 மரங்களில் இப்போது மர சிற்பங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

இதில் இயற்கைகாட்சி,பறவைகள், விலங்கினங்கள் என பல்வேறு விதமான வடிவத்தை மரச் சிற்பங்களாகச் செதுக்கி இன்று அழகூட்டுகிறது.இவையெல்லாம் மரங்களைத் துண்டுகளாக வெட்டி வைத்து,செதுக்குவது அல்ல.நிற்கும் மரத்தில் அப்படியே அவற்றின் அகலம்,நீலம் ஆகியவற்றைக் கொண்டு எந்தவகையான சிற்பம் செதுக்கினால் பார்க்க நன்றாக இருக்கும் என்றும் திட்டமிட்டு,அது மட்டுமல்லாமல் அதற்கேற்ப சிற்பங்கள் செதுக்கப்படுகிறது.

தமிழகத்தில் எங்கள் ஊரில் வைத்தது தான் முதல் முறையாகும்.மேலும்,இதற்கு பெரும்பாலும் பணத்தைச் செலவழிக்க மாட்டார்கள்.ஒரு மர சிற்பம் செய்ய ஒரு வாரமாவது ஆகும். இங்கே பல விதமான வகையான மர சிற்பங்கள் எங்கள் ஊரின் மலைச்சுற்றும் பாதையில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

அணில் சிற்பம்(வேப்ப மரம்)

ஒட்டகச் சிவிங்கி,பறவை(புளிய மரம்)

மயில்,செல்லும்,முதலை,டால்பின்,

வாட்ச்,பூ வகைகள்,நூலகம்,இறகுகள்.

மரங்களை வீணாக்காமல் இதுபோன்ற அறிவுறுத்தும் வகையில் சிற்பம் செதுக்கலாம். காய்ந்துப்போன மரத்தை அகற்றினால் விறகிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.வேறு எதற்கும் உதவாகாது. ஐரோப்பிய நாடுகளிலும்,மேலை நாடுகளிலும் மற்றும் வட அமெரிக்க தென் அமெரிக்க நாடுகளில் சாலையோர மரங்கள் ஏதாவது பட்டுப்போனால், சிற்பங்களாகவும், சாலையோர இருக்கைகளாகவும் மாற்றியுள்ளனர்.

மலைச் சுற்றும் பாதையில் வடிவமைக்கப்பட்ட மரச்சிற்பங்கள்

இயற்கை சார்ந்த ஆரோக்கியமான சமூகத்தை நோக்கி எல்லோரும் முன்னேறலாம். இயற்கை கொஞ்சம் கொஞ்சமாக அழிய ஆரம்பித்துவிட்டது. ஆனால்,இயற்கை என்ற ஒன்று எப்பொழுதுமே புதிதாக வென்று மனிதனைப் பார்த்துச் சிரிக்கிறது. எனவே, மரங்கள் பட்டுபோனாலும் நாம் உயிர்ப்புடன் மாற்ற வேண்டும்.

இனி வரும் காலங்களில், இதுபோன்ற பட்டுப்போன மரங்களை வெட்டி அகற்றாமல், அந்த மரங்களுக்கு கலை சிற்பங்கள் மூலம் உயிர்க் கொடுப்போம். இதுபோன்ற முயற்சியை பின்வரும் காலங்களில் செய்தால் நன்றாக இருக்கும். நம் முன்னோர்களின் இயற்கை அறிவைக் கொண்டாட அடுத்தத் தலைமுறைக்குச் சொல்லித்தர வேண்டியது !

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.