இந்திய ராணுவ தாக்குதலால் நெருக்கடி: ஆயுதப் பற்றாக்குறையால் பாகிஸ்தான் தவிப்பு

புதுடெல்லி: பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு பதிலடி​யாக பாகிஸ்​தான் மீது இந்​தியா வான்​வழித் தாக்​குதல் நடத்தி உள்​ளது. இதன் பிறகு இந்​திய ராணுவப் படைகள் மிகுந்த விழிப்​புடன் உள்​ளன.

இந்​தி​யா​வின் முன்னேற்​பாடு​களை கண்​டு, பாகிஸ்​தானில் அச்​சம் அதி​கரித்​துள்​ளது. இரு​நாடு​கள் இடையே போர் ஏற்​பட்​டால் நீண்ட காலம் தாக்​குப் பிடிக்க முடி​யாத நிலை​யில் பாகிஸ்​தான் உள்​ளது. இதற்கு பாகிஸ்​தானிடம் ஆயுதங்​கள் மற்​றும் வெடி மருந்​துகளுக்கு பெரும் பற்​றாக்​குறை இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது.

பாகிஸ்​தானிடம் தற்​போது 96 மணி நேரம், அதாவது 4 நாட்​கள் மட்​டுமே பீரங்​கி​கள் மற்​றும் ராக்​கெட்​டு​களை இயக்​கு​வதற்​கான வெடிமருந்​துகள் உள்​ளன. இதனால் மிக​வும் ஆபத்​தான சூழலுக்கு அந்​நாடு தள்​ளப்​பட்​டுள்​ளது,இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்​டிடம் பாகிஸ்​தான் எல்​லைகளில் பணி​யாற்​றும் இந்​திய உளவுத்​துறை வட்​டாரம் கூறிய​தாவது: பாகிஸ்​தானின் ராணுவ உத்தி இந்​தி​யா​வுக்கு எதி​ராக அதன் நிலங்​களை கைப்​பற்​று​வதை அடிப்​படை​யாகக் கொண்​டது. இதற்கு பாகிஸ்​தானுக்கு 155 மிமீ குண்​டு​கள் மற்​றும் 122 மிமீ ராக்​கெட்​டு​கள் தேவை. அவை இப்​போது அதன் கையிருப்​பில் இல்​லை. ராணுவத்​துக்​கான வெடிமருந்​துகளை தயாரிக்​கும் பாகிஸ்​தான் ஆர்​டினன்ஸ் தொழிற்​சாலை​யானது காலா​வ​தி​யான தொழில்​நுட்​பம் மற்​றும் அதி​கரித்து வரும் உலகளா​விய தேவை காரண​மாக புதிய பொருட்​களை வாங்க முடி​யாத நிலைக்கு தள்​ளப்​பட்டு வெகு கால​மாகி விட்​டது.

பாகிஸ்​தான் சமீபத்​தில் உக்​ரைனுக்கு அதிக அளவி​லான வெடிமருந்​துகளை விற்​றுள்​ளது, இதனால் அதன் சொந்த ராணுவ இருப்​பு​கள் கிட்​டத்​தட்ட காலி​யாகி​விட்​டன. இதனால் ராணுவம் பலவீனம் அடைந்​துள்​ளது. பாகிஸ்​தானின் பொருளா​தார நிலை​யும் வெடிமருந்​துகளை உரு​வாக்​கும் அளவுக்கு இல்​லை. அங்கு பணவீக்​கம் உச்​சத்​தில் உள்​ளது. கடன் அதி​கரித்து வரு​கிறது. அந்​நியச் செலா​வணி இருப்​பும் வேக​மாக குறைந்து வரு​கிறது. இவ்​வாறு அந்த வட்​டாரம் தெரி​வித்​தது.

வெடிமருந்து பற்​றாக்​குறை​யில் சிக்​கி​யுள்ள பாகிஸ்​தானிடம் இந்​தி​யா​வுக்கு இணை​யான ஆயுதங்​களும் இல்​லை. இருப்​பினும், பாகிஸ்​தான் தலை​வர்​கள் இந்​தி​யா​வுக்கு எதி​ராக அச்​சுறுத்​தல் வெளி​யிடு​வதை நிறுத்​த​வில்​லை.பாகிஸ்​தான் அமைச்​சர்​களான ஹனிஃப் அப்​பாஸி, அதாவுல்லா தரார், காஜா ஆசிப் ஆகியோ​ரும் தாக்​குதல் மிரட்​டல் விடுத்​திருப்​பது அந்​நாட்​டில் பதற்​றம் அதி​கரிப்​ப​தற்கு முக்​கிய காரண​மாக அமைந்​தது.சர்​வ​தேச நாடு​களிடம் ஒவ்​வொரு பைசாவுக்​கும் பாகிஸ்​தான் கெஞ்​சி​யபடி இருப்​ப​தாக கூறப்​படு​கிறது. பாகிஸ்​தான் மக்​கள் கோதுமை மாவு மற்​றும்​ தண்​ணீருக்​காக உள்​நாட்​டில்​ போ​ராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.