ஐ.பி.எல்.: வெற்றிப்பாதைக்கு திரும்புமா சி.எஸ்.கே..? – கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்

கொல்கத்தா,

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 56 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தொடரில் இருது வெளியேறின. இந்நிலையில், இந்த தொடரில் கொல்கத்தாவில் இன்று நடக்கும் 57வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஆட உள்ளன. கொல்கத்தா அணி நடப்பு தொடரில் சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 11 ஆட்டங்களில் ஆடியுள்ள கொல்கத்தா 5 வெற்றி, 5 தோல்வி, 1 முடிவில்லை கண்டு புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

கொல்கத்தா அணிக்கு எஞ்சிய 3 ஆட்டங்களும் முக்கியமானதாகும். மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெறுவதுடன், ரன்ரேட்டையும் வலுப்படுத்தி மற்ற அணிகளின் முடிவும் சாதகமாக அமைந்தால் தான் அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் அதேவேளையில் சென்னை அணி வழக்கத்துக்கு மாறாக இந்த சீசனில் தடுமாறி வருகிறது. 11 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 9 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வி கண்ட சென்னை அணி எஞ்சிய ஆட்டங்களில் வெற்றி பெற போராடும். அத்துடன் கொல்கத்தாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 103 ரன்னில் அடங்கி 8 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கவும் முயற்சிக்கும்.

அதே நேரத்தில் 6-வது வெற்றியை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க கொல்கத்தா அணி வரிந்து கட்டும். இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை 19 ஆட்டங்களிலும், கொல்கத்தா 11 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.