குஜராத் அணியுடன் தோல்வி! மும்பை அணியின் பிளே ஆப்பிற்கு சிக்கல்?

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் தோல்வி அடைந்தது. மழையால் போட்டி தாமதமான நிலையில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு புதிய டார்கெட் கொடுக்கப்பட்டது. ஒரு ஓவருக்கு 15 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில், கடைசி பதில் குஜராத் அணி திரில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதன் மூலம் மும்பை அணியின் தொடர்ச்சியாக வெற்றிகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது குஜராத்.

மேலும் படிங்க: இதனால்தான் கேப்டன் பதவியில் இருந்து விலகினேன்.. உண்மை போட்டுடைத்த கோலி!

ஐபிஎல் 2025 தொடர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஒவ்வொரு அணிகளும் தங்களது பிளே ஆப் வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ள போராடி வருகின்றனர். 15 புள்ளிகளுக்கு மேல் எடுத்தும் இன்னும் ஒரு அணி கூட பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்ய முடியவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், ஐந்து அணிகள் தற்போது போட்டி போட்டு வருகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது 12 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. அடுத்த இரண்டு போட்டிகளில் எப்படியாவது மும்பை அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றதாக வேண்டும்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இன்னும் ஒரு போட்டி வான்கடேவில் உள்ளதால் அவர்களின் வெற்றி சாத்தியம் தான் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் 16 புள்ளிகளுடன் பிளே ஆப் வாய்ப்பை உறுதிபடுத்த முடியும். இருப்பினும் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும்  வெற்றி பெற்றால் நிச்சயமாக பிளே ஆப்க்கு தகுதி பெறலாம். மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்ததாக வரும் மே 11ஆம் தேதி தரம்சாலாவில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளனர். அதனை தொடர்ந்து மே 15 ஆம் தேதி மும்பையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளனர்.

நேற்று மும்பையில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. கடந்த சில போட்டிகளாக சிறப்பாக விளையாடிய வந்த ரோகித் சர்மா மற்றும் ரிக்கல்டன் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். பவர் பிளேயில் இரண்டு விக்கெட்களை இழந்து தடுமாறியது மும்பை இந்தியன்ஸ். அதன் பிறகு ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் வில் ஜாக்ஸ் கூட்டணி சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. வில் ஜாக்ஸ் 53 ரன்களுக்கும், சூர்யா குமார் யாதவ் 35 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர்.

அடுத்து களம் இறங்கிய திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா ரன்கள் அடிக்க தவறியதால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. எளிதான இலக்கை எதிர்த்து விளையாடினாலும் மும்பை அணி சிறப்பாக பந்து வீசியது. மழை குறிக்கிட்டதால் போட்டி தாமதம் ஆனது. டக்வத் லூயிஸ் முறைப்படி குஜராத் டைட்டன்ஸ் அணி கடைசி ஓவரில் 15 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில், சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர்.

மேலும் படிங்க: இறுதி கட்டத்தில் ஐபிஎல் 2025.. பிளே ஆஃப் செல்லப்போகும் அந்த 4 அணி எது?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.