பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தாக்குதல்: அதிபர் ட்ரம்ப் உட்பட உலகத் தலைவர்கள் சொல்வது என்ன?

புதுடெல்லி: பாகிஸ்​தானுக்கு எதி​ராக இந்​தியா நடத்​திய ‘சிந்​தூர்’ தாக்​குதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உட்பட பல்​வேறு நாட்டு தலை​வர்​கள் கருத்து தெரி​வித்​துள்​ளனர்.அதன் விவரம் வரு​மாறு:

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: தீவிர​வாதம் ஒரு அவமானம். கடந்த காலங்​களை பார்க்​கும் போது ஏதோ ஒன்று பெரி​தாக நடக்கப் போகிறது என்​பது மக்​களுக்கு தெரி​யும். இந்​தியா, பாகிஸ்​தான் ஆகிய இரு நாடு​களும் நீண்ட கால​மாக மோதலில் ஈடு​பட்டு வரு​கின்​றன. இந்த மோதல் பல தசாப்​தங்​களாக நீடித்து வரு​கிறது. இது விரை​வில் முடிவுக்கு வரும் என நம்​பு​கிறேன்.

சீன வெளி​யுறவுத் துறை செய்​தித் தொடர்​பாளர் லின் ஜியான்: பாகிஸ்​தான் மீது இந்​தியா தாக்​குதல் நடத்​தி​யது கவலை அளிக்​கிறது. இரு நாடு​களும் அமைதி காக்க வேண்​டும். இரு நாடுகளிடமும் நாங்​கள் பேசி வரு​கிறோம். இரு நாடு​களுக்கு இடை​யில் உள்ள பதற்​றத்தை தணிக்க சீனா தயா​ராக உள்​ளது.

ரஷ்ய வெளி​யுறவுத் துறை: இரு நாடு​களுக்கு இடை​யில் தாக்​குதல் ஏற்​பட்​டுள்​ளது கவலை அளிக்​கிறது. இந்​திய தாக்​குதலுக்கு பிறகு இரு நாட்டு தலை​வர்​களு​ட​னும் தொலைபேசி​யில் பேசினோம். இரு நாடு​களும் கட்​டுப்​பாட்​டுடன் நடந்து கொள்ள வேண்​டும். இரு நாடு​களும் அமை​தி​யான பேச்​சு​வார்த்​தை​ நடத்தி பிரச்​சினையை தீர்க்க வேண்​டும்.

பிரிட்​டன் வர்த்தக செயலர் ஜோனாத்​தன் ரெனால்ட்​ஸ்: இந்​தியா – பாகிஸ்​தான் இடையே உள்ள பதற்​றத்தை தணிக்க இரு நாடு​களுக்​கும் பிரிட்​டன் ஆதரவு அளிக்​கும். நாங்​கள் இரு நாடு​களுக்​கும் நண்​பர்​கள். அந்​தப் பிராந்​தி​யத்​தில் அமைதி ஏற்பட பேச்​சு​வார்த்தை உட்பட எந்த நடவடிக்கை எடுத்​தா​லும் இரு நாடு​களுக்​கும் உதவ பிரிட்​டன் தயார்.

ஐ.நா. பொதுச் செய​லா​ளர் அன்​டானியோ குத்​தேரஸ்: இரு நாடு​களும் கட்​டுப்​பாட்​டுடன் செயல்பட வேண்​டும். ராணுவ ரீதியி​லான தாக்​குதலை தீவிர​மாக நடத்தக் கூடாது. இந்​தியா – பாகிஸ்​தான் போரை உலக நாடு​களால் தாங்க முடி​யாது.

இந்​தி​யா​வுக்​கான இஸ்​ரேல் தூதர் ரியூவென் அசார்: தங்​கள் நாட்டை பாது​காக்க பாகிஸ்​தான் மீது இந்​தியா தாக்​குதல் நடத்​தி​யதற்கு இஸ்​ரேல் முழு ஆதர​வளிக்​கிறது. அப்​பாவி பொது​மக்​களுக்கு எதி​ராக தாக்​குதல் நடத்தி விட்டு எங்​கும் ஒளிந்து கொள்ள முடி​யாது என்​பதை தீவிர​வா​தி​கள் கண்​டிப்​பாக தெரிந்து கொள்ள வேண்​டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.