லாகூர்,
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த கிளர்ச்சி அமைப்பை பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இந்த அமைப்பு பாகிஸ்தான் போலீசார், ராணுவம் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, இந்த கிளர்ச்சி அமைப்பை குறிவைத்து பாதுகாப்புப்படையினரும் அவ்வபோது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பலூசிஸ்தான் மாகாணம் குச்சி மாவட்டம் மச் பகுதியில் ராணுவ வாகனம் இன்று சென்றுகொண்டிருந்தது. இந்த வானத்தை குறிவைத்து பலூசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பு கண்ணிவெடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து படுகாயமடைந்த வீரர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிகப்பட்டனர்.மேலும், இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.