இந்தியாவில் சைபர் அட்டாக்… குறி வைக்கும் பாகிஸ்தான்; CERT-In அலர்ட்

Operation Sindoor Update: ஆபரேஷன் சிந்தூர் காரணமாக பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அடியை இந்தியா வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தானில் உள்ள பல பயங்கரவாத மறைவிடங்கள் ஒரேடியாக அழிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த தாக்குதலில் 100 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் கூறியிருக்கிறது. அந்நாடு தற்போது இருக்கும் சூழலில் பதிலடி எந்த மாதிரியாக இருக்கும் என்பதை இந்த செய்தியில் விரிவாக காணலாம். மேலும் இது தொடர்பாக, கணினி அவசரகால பதிலளிப்பு குழுவான “CERT-In” சில முக்கிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கணினி அவசரகால பதிலளிப்பு குழு அதாவது CERT-In இந்தியாவில் சைபர் தாக்குதல் (Cyber Attack) குறித்து எச்சரிக்கையை தற்போது விடுத்துள்ளது. கணினி அவசரகால பதிலளிப்பு குழுவின் கூற்றுப்படி, இதில் சில முக்கியமான நிறுவனங்கள் குறிவைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக இந்திய நிறுவனங்களை குறிவைத்து பாகிஸ்தான் பல சைபர் தாக்குதல்களை நடத்தியது என்பது இன்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மனி கண்ட்ரோல் வழங்கியுள்ள அறிக்கையின்படி, நாட்டின் முக்கிய நிதி நிறுவனங்கள் மற்றும் பிற முக்கிய துறைகளை சைபர் தாக்குதலில் அதாவது சைபர் அட்டாக்கில் இருந்து பாதுகாக்க கணினி அவசரகால பதிலளிப்பு குழு (CERT-In) சில முக்கிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக, சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த அரசாங்கம் அரசாங்கத்திற்கு மட்டுமல்ல, தனியார் நிறுவனங்களுக்கும் கவனம் செலுத்தி வருகிறது. இதன் மூலம், சைபர் தாக்குதல்களை எளிதாக தவிர்க்கலாம்.

சில அறிக்கைகளின் படி, பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்திய அரசாங்கம் சைபர் தாக்குதல்கள் குறித்து விழிப்புணர்வை அதிகரித்துள்ளது. அதன்படி CERT-In முதற்கட்டமாக வங்கிகளுக்கு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது. சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த அரசாங்கம் நாஸ்காமுடன் இணைந்து செயல்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல் மிகப்பெரிய எச்சரிக்கை அமைப்பை உருவாக்குவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஆன்லைன் தாக்குதலில் காப்பாற்றிக்கொள்ளலாம். மேலும் DDoS தாக்குதல் மூலம் இந்திய வலைத்தளங்களை ஹேக் செய்ய பாகிஸ்தான் முயற்சித்துள்ளது.

சைபர் தாக்குதலை எவ்வாறு தவிர்ப்பது?
2FA டூ ஃபேக்டர் அதென்டிகேஷனை (Two-Factor Authentication) இயக்கவும்.

தெரியாத இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம்.

பொது இடத்தில் இருக்கும் ஃப்ரீ வைஃபையை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

மென்பொருள் மற்றும் பயன்பாடுகளைப் புதுப்பித்த நிலையில் வைத்திருங்கள்; சமீபத்திய புதுப்பிப்புகள் பெரும்பாலும் பாதுகாப்புத் திருத்தங்களைக் கொண்டிருக்கும்.

எந்த வலைத்தளத்திலிருந்தும் அல்லது முன்னோக்கி இணைப்பிலிருந்தும் APK ஐ பதிவிறக்க வேண்டாம்.

இதனிடையே நேற்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீரில் (PoK)  இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. 9 பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய ராணுவம் குறிவைத்தது. தற்போது இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கர்னல் சோபியா குரேஷி (Colonel Sofiya Qureshi) மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் (Wing Commander Vyomika Singh) ஆப்ரேஷன் சிந்தூர் குறித்தும், பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் விளக்கம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தகக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.