ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லையோர பகுதிகளில் இன்று மாலை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருள்சூழ்ந்து காணப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜம்மு, அக்னூர், பதான்கோட், உதம்பூர் மற்றும் ஜெய்சல்மர் ஆகிய இடங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணைகளை வீசியது. இதில் இந்தியா எட்டு ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியது. தவிர, ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தவும் பாகிஸ்தான் முயன்றது. இந்த முயற்சியையும் இந்தியா முறியடித்துள்ளதுடன் பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. […]
