ஸ்பேஸ் எக்ஸின் நிறுவனர் எலோன் மஸ்க், சூரியனால் பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் அழிக்கப்படும் என்று கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
சூரியனின் வெப்பத்தால் பூமி அழியலாம், எனவே செவ்வாய்கிரகத்தில் மனிதன் குடியேறுவதற்கான திட்டங்களை இப்போதிலிருந்தே செயல்படுத்த வேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் FOX NEWS சேனலுக்கு அளித்த பேட்டி, இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ”சில நூறு மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியன் பூமியின் வளிமண்டலத்தை அகற்றி, பெருங்கடல்களை கொதிக்க வைக்கும். அதுவே வாழ்க்கையின் முடிவாக இருக்கும்.
சுமார் ஐந்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியன் பூமியை மூழ்கடித்து எரிக்கும் போது, பேரழிவு வரும்”.. எனவே “மற்ற கிரகங்களில் குடியேறுவது குறித்து வலியுறுத்தினார்.

செவ்வாய் கிரகத்தின் ஆராய்ச்சி முடிவுகள், எதிர் காலத்தில் வரும் மாற்றங்கள், இவற்றை எல்லாம் பொறுத்து செவ்வாயில் மனதனின் வாழ்க்கை ஆதிக்கம் இருக்க வேண்டும் என்றும்,செவ்வாய் கிரகத்திற்கு தற்காலிக மனித வருகை மட்டுமல்ல, மனிதகுலத்திற்கு நிரந்தர, சுதந்திரமான அடித்தளத்தை உருவாக்குவது என மஸ்க் பேசியிருந்தார்.
தி நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின்படி, 53 வயதான மஸ்க், செவ்வாய் கிரக காலனித்துவத்தை நோக்கிய ஸ்பேஸ்எக்ஸின் முயற்சிகளை துரிதப்படுத்தியுள்ளார்.
ஆனால் ”தி ஆஸ்ட்ரோபிசிகல் ஜர்னலில்” வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், சூரியனால் பூமி அழிய பல பில்லியன் ஆண்டுகளுக்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ளது.

அதே சமயம் செவ்வாய் கிரகத்தில் மனித காலனி ஆதிக்கத்தை செயல்படுத்த நினைக்கும் எலான் மஸ்க் மற்றும் அவரது ஸ்ப்பேஸ் எக்ஸ் நிறுவனம் 2028 டிசம்பர் அல்லது 2029 ஜனவரியில், ஸ்பேஸ் எக்ஸ் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் என கூறியுள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் குடியேறுபவர்கள் தங்களுக்கான ஆட்சி முறையை, தாங்களே தேர்ந்தெடுக்கலாம் என எலான் மஸ்க் கடந்த 2024-ல் ட்விட்டரில் ஒரு பயனருக்கு பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.