ரோகித் சர்மா ஓய்வு.. அடுத்த டெஸ்ட் அணியின் கேப்டன் யார்?

ஐபிஎல் தொடர் வரும் மே 25ஆம் தேதி முடிவடைகிறது. இத்தொடர் முடிவடைந்த உடன் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இத்தொடர் ஜூன் 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

இத்தொடருக்கான அணியை தேர்வு செய்வதில் பிசிசிஐ மும்மரம் காட்டி வரும் நிலையில், ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். 38 வயதான அவர், 67 டெஸ்ட் போட்டிகளில் 12 சதம் 18 அரைசதம் உட்பட 4301 ரன்கள் குவித்துள்ளார். இச்சூழலில் அவர், ஓய்வை அறிவித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற் கேள்வி எழும்பி உள்ளது. இது குறித்தான ஆலோசனைகள் ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் நடத்தி முடிவெடுக்கப்படும். 

அடுத்த கேப்டன் யார்? 

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா இருந்து வருகிறார். அவரை கேப்டனாக நியமிக்க வாய்ப்பு குறைவாக உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால், பும்ரா வேகப்பந்து வீச்சாளர் என்பதால், அவருக்கு அடிக்கடி காயம் ஏற்படும். சமீபத்தில் கூட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ் தொடரின் கடைசி போட்டியில் காயம் காரணமாக வெளியேறினார். அதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட முடியாமல் போனது. பின்னர் ஐபிஎல் தொடரில் இரண்டு வாரம் கழித்தே மும்பை அணியில் இணைந்தார். எனவே பும்ரா வேகப்பந்து வீச்சாளர் என்பதாலும் அவரது பவுலிங் அக்‌ஷனுக்கு அடிக்கடி காயம் ஏற்படும் என்பதாலும் அவரை அடுத்த இந்திய அணியின் கேப்டனாக நியமிக்க பிசிசிஐ தயங்குவதாக கூறப்படுகிறது. 

அதேசமயம் பிசிசிஐ கேப்டன் தேர்வுக்கு பும்ராவை தவிர்க்கும் பட்சத்தில், இளம் வீரரை தேர்வு செய்ய முற்படும். அதாவது இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலத்தை சிந்தித்து அதேசமயம் கொஞ்சம் அணுபவம் வாய்ந்த வீரரையும் தேர்வு செய்யும். அதன்படி தற்போதைய டெஸ்ட் அணியில் அணுபவம் வாய்ந்தவர்களாக சுப்மன் கில், கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் உள்ளனர். இவர்களில் ஒருவரை தேர்வுக்குழு இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிங்க: ஆர்சிபி-க்கு ஷாக்.. விலகிய ஸ்டார் வீரர்.. அப்போ அவருக்கு பதில் இவரா?

மேலும் படிங்க: ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வில்லை அடுத்த ஆண்டு நிச்சயமாக விளையாடுவேன் – தோனி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.