CSK: மாற்றத்தால் கிடைத்த வெற்றி.. இத முன்னாடியே பண்ணிருக்கலாம்?

2025 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக விளையாடி எலிமினேட் ஆகி உள்ளது. 12 போட்டிகளில் 9 தோல்விகளை பெற்றுள்ளது. இதுவரையில் எந்த ஒரு சீசனிலும் இவ்வளவு மோசமாக சென்னை அணி செயல்பட்டது இல்லை. 

தொடரின் தொடக்கத்தில் தோல்விகளை பெற்றபோதே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் எதற்கு செவி சாய்க்காமல் அணியில் எந்த மாற்றத்தையும் கொண்டு வராமல், தொடர் தோல்விகளை பெற்று வந்தது. பலத்த அடியை வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தந்து வருகிறது. 

ஆயூஷ் மாத்ரே, டெவால்ட் ப்ரூவிஸ், அன்ஷுல் கம்போஜ் என அணியில் தாமதமாக சேர்த்தனர். ஆனால் இவர்கள் அணியில் வந்த பிறகு அணி சற்று தேறியது. இதற்கு பலனாக 180 ரன்களையே தாண்டாத சென்னை அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 2013 ரன்கள் இலக்கை நெருங்கியது. அப்போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியை தழுவியது. இதையடுத்து நேற்று (மே 07) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி அபாரமாக விளையாடியது. அப்போட்டியில் ப்ரூவிஸ், துபே ஆகியோர் சிறப்பாக விளையாடினர். குறிப்பாக 3வது இடத்தில் களம் இறங்கிய உர்வில் பட்டேல் 11 பந்துகளில் 31 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் சென்னை அணியால் அப்போட்டியில் வெற்றி பெற முடிந்தது. 

இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சீக்கிரமாகவே 5 விக்கெட்களை இழந்தது. இருப்பினும் சென்னை அணி வெற்றி பெற்றது. இதற்கு காரணம் சென்னை அணி தற்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கியதுதான். எலிமினேட் ஆன பிறகு சென்னை அணி தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரின் தொடக்கத்திலேயே செய்திருந்தால், பிளே ஆஃப் சுற்றுக்கு சென்று இருக்கலாம் என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். மேலும், இந்த சீசன் சென்னை அணிக்கு ஒரு பாடம் எனவும் கூறி வருகின்றனர். 

மேலும் படிங்க: ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் அவசர அவசரமாக ஓய்வை அறிவித்தது ஏன்? பின்னணி

மேலும் படிங்க: ரோகித் சர்மா ஓய்வு.. அடுத்த டெஸ்ட் அணியின் கேப்டன் யார்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.