இந்தியா பாகிஸ்தான் போர்! இனி ஆசியக் கோப்பை போட்டிகள் இருக்காது?

சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எப்போதும் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்த ஒரு இரு தரப்பு தொடரிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடியது இல்லை. ஐசிசி போட்டிகளில் மட்டுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதனால் எப்போதுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான அணிகள் கிரிக்கெட் விளையாடினால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். கடைசியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான அணிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடியது. அதில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் அடுத்ததாக இந்த இரு அணிகளும் ஆசிய கோப்பையில் விளையாட இருந்தனர். ஆனால் இந்த தொடர் தற்போது நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏப்ரல் மாதம் இந்தியாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதலையை அடுத்து பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளை இந்திய ராணுவம் அழித்தது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே போர் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களாக எல்லையில் அதிக பதற்றம் நிலவி வருகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்த ஆண்டு பாகிஸ்தான் நடத்திய நிலையில் இந்தியா பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்தது, இதனால் இந்தியா விளையாடிய போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இனி எந்த ஒரு ஐசிசி தொடரிலும் பாகிஸ்தான் இந்தியாவிற்கு வராது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

தற்போது போர் ஏற்படும் சூழல் நிலவி வரும் நிலையில் இனி இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டியில் நடைபெறாது என்று கூறப்படுகிறது. இதனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் ஆசிய கோப்பை போட்டிகள் முற்றிலும் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா போன்ற அணிகள் இடம் பெற்று உள்ளது. இந்த தொடரில் பாகிஸ்தான் இடம் பெறவில்லை என்றால் இந்திய அணி விளையாட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படி இல்லை என்றால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்த தொடரில் இந்தியா விளையாடாத படி போட்டிய அட்டவணைகள் மாற்றி அமைக்கப்படலாம்.

ஆனால் இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் என்ன முடிவு எடுக்கப்படும் என்பது பெரிய சந்தேகமே அல்லது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இரு நாடுகளிடம் பேசி கிரிக்கெட் போட்டியை நடத்த சம்மதம் வாங்கினால் ஆசிய கோப்பை நடக்க வாய்ப்பு உள்ளது. தற்போது போர் சூழல் காரணமாக ஐபிஎல் 2025 போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் மீதமுள்ள போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.