கேப்டவுன்,
தென் ஆப்பிரிக்காவின் பிரதான எதிர்க்கட்சியான பொருளாதார சுதந்திர கட்சி மந்திரி ஜூலியஸ் மலேமா (வயது 44). இவர் மேலை நாடுகளின் ஏகாதிபத்தியத்தை கடுமையாக எதிர்த்து வருகிறார். மேலும் நாட்டில் ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமான நிலங்கள் அனைத்தையும் தேசியமயமாக்கவேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.
இந்தநிலையில் லண்டனில் அமைந்துள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நாளை (சனிக்கிழமை) மாநாடு நடைபெற உள்ளது. இதில் தென் ஆப்பிரிக்கா சார்பில் ஜூலியஸ் மலேமா மந்திரி கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்தார். ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள அவருக்கு அங்கு விசா மறுக்கப்பட்டது. அவர் இங்கிலாந்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே அவர் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதில் சிக்கல் நிலவுகிறது.