முதல்வர் தலைமையில் சென்னையில் இன்று மாலை ராணுவ ஆதரவு பேரணி: பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

சென்னை: இந்​திய ராணுவத்​தின் வீரத்தை போற்​ற​வும், தேச ஒற்​றுமையை வலுப்​படுத்​தும் வகை​யிலும் சென்னை மெரி​னா​வில் முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் இன்று மாலை பேரணி நடை​பெற உள்​ளது. இதில் பங்​கேற்​கு​மாறு மக்​களுக்கு அவர் அழைப்பு விடுத்​துள்​ளார்.

இதுகுறித்து முதல்​வர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: பாகிஸ்​தானின் அத்​து​மீறல்​கள், தீவிர​வாத தாக்​குதல்​களுக்கு எதி​ராக வீரத்​துடன் போர் நடத்தி வரும் இந்​திய ராணுவத்​துக்கு நமது ஒன்​று​பட்ட ஒற்​றுமை​யை​யும், ஆதர​வை​யும் வெளிப்​படுத்த வேண்​டிய தருணம் இது. அதை வெளிப்​படுத்​தும் வகை​யில், சென்னை மெரி​னா​வில் உள்ள டிஜிபி அலு​வல​கத்​தில் இருந்து எனது தலை​மை​யில் இன்று மாலை 5 மணிக்கு பேரணி நடை​பெறும். தீவுத்​திடல் அருகே உள்ள போர் நினைவு சின்​னம் அருகே பேரணி நிறைவு பெறும்.

இதில் முன்​னாள் படைவீரர்​கள், அமைச்​சர்​கள், பொது​மக்​கள், மாணவர்​கள் பங்​குபெறுகின்​றனர். இந்​திய ராணுவத்​தின் வீரம், தியாகம், அர்ப்​பணிப்பை போற்​று​வதற்​கும், தேச ஒற்​றுமையை வலுப்​படுத்​து​வதற்​கும் இந்த பேரணி நடத்​தப்​படு​கிறது. இதில் தமிழக மக்​கள் திரளாக பங்​கேற்​று, நமது ராணுவத்​துக்கு ஆதரவு தெரிவிக்​கு​மாறு கேட்​டுக் கொள்​கிறேன். இவ்​வாறு முதல்​வர்​ தெரி​வித்​துள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.