Health: உங்க தலைமுடிக்கு ஏற்ற ஷாம்பு எது? கண்டுபிடிக்கலாம் வாங்க!

ஒவ்வொரு வீட்டுக் குளியல் அறையிலும் தவிர்க்க முடியாத பொருளாகிவிட்டது ஷாம்பு. ஆனால், கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் எண்ணற்ற ஷாம்புகளில் சிறந்தது எது… தனக்குப் பொருந்தமானது எது என்ற குழப்பம் பெரும்பாலானவர்களுக்கு உண்டு. இதுபற்றி விளக்குகிறார் ட்ரைக்காலஜிஸ்ட் தலட் சலீம்.

Shampoo
Shampoo

* கிளென்ஸிங் ஷாம்பு (Cleansing): மிதமானது, வீரியமிக்க ரசாயனங்கள் இருக்காது.

* ஆன்டி-டான்ட்ரஃப் ஷாம்பு (Anti-dandruff): பொடுகு இருந்தால் அகற்ற உதவுகிறது. மேலும், தலையில் ஏற்படும் எரிச்சல், நமைச்சல் போன்றவற்றைப் போக்க ஏற்றது.

* ஆன்டி செபொரிக் ஷாம்பு (Anti seborrheic): அதிகமான பொடுகு, பூஞ்சைத் தொற்று இருந்தால், அவற்றைப் போக்க உதவுகிறது.

* கெரடோலிடிக் ஷாம்பு (Keratolytic): சொரியாசிஸ் நோயாளிகள், செதில் செதிலாகத் தலையில் தோல் உரியும் பிரச்னை இருப்பவர்கள் பயன்படுத்தலாம்.

* வால்யூமைசிங் ஷாம்பு (Volumizing): குறைந்த முடி கொண்டவர்கள் இதைப் பயன்படுத்துகையில், முடி அடர்த்தியாகத் தெரியும்.

* மாய்ஸ்சரைசிங் ஷாம்பு: வறண்ட முடி கொண்டவர்களுக்கான பிரத்யேக ஷாம்பு. இதனால், மென்மையான கூந்தலைப் பெறலாம்.

* ரிவைட்டலைசிங் ஷாம்பு (Revitalizing): கூந்தலுக்கு கலரிங் செய்தவர்கள், ஸ்ட்ரைட்டனிங், பர்மிங் போன்ற கெமிக்கல் சிகிச்சை எடுத்தவர்கள் பயன்படுத்த வேண்டிய ஷாம்பு.

* 2 இன் 1 ஷாம்பு: இதில் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் இரண்டுமே கலந்திருக்கும்.

* ஸ்விம்மர் ஷாம்பு (Swimmer): நீச்சல் குளத்தில் உள்ள குளோரின் கூந்தலில் படுவதால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும்.

Shampoo
Shampoo

* ஒவ்வொரு வகைத் தலைமுடிக்கும் ஒவ்வொரு வகை ஷாம்பு இருக்கிறது. எனவே, அவரவர் தலைமுடி எந்த வகையைச் சேர்ந்தது என்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். தலைமுடியில், வறண்ட, எண்ணெய் பசை, நார்மல் கூந்தல் எனப் பல வகை உள்ளன. எந்த வகையான கூந்தலுக்கு எந்த மாதிரியான ஷாம்பு சரியாக இருக்கும் என்று சரும மருத்துவர் ஆலோசனை பெற்று, அதன் அடிப்படையில் ஷாம்புவைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

* எண்ணெய் பசைக் கூந்தலாக இருந்தால், மைல்டு ஷாம்பு பயன்படுத்தலாம்.

* நார்மல் கூந்தல் உள்ளவர்களுக்கு பொடுகு, அரிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் வரலாம். இவர்கள், மைல்டு டிடர்ஜென்ட் உள்ள ஷாம்புவைப் பயன்படுத்தலாம். இது, தலையில், ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும்.

* வறண்ட கூந்தல் உள்ளவர்கள், டிடர்ஜென்ட் உள்ள ஷாம்பு பயன்படுத்தக் கூடாது. முடியின் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும் ஷாம்பு பயன்படுத்த வேண்டும்.

* பி.ஹெச் (pH) அளவு 5.5 இருக்கும் ஷாம்பு மிதமானது.

Shampoo
Shampoo

* பொதுவாக, பி.ஹெச் அளவு 5 – 7 வரை இருக்கும் ஷாம்புவைப் பயன்படுத்தலாம். இதில், எந்த கூந்தலுக்கு, எது பொருந்தும் என மருத்துவரிடம் ஆலோசித்துப் பயன்படுத்த வேண்டும்.

* பென்சாய்ல் (Benzoyl) இருக்கும் ஷாம்பு, ஓரளவுக்கு ஈரப்பதத்தைத் தரும். ஆனால், இந்த கெமிக்கலின் அளவு சரியான அளவில் இருக்க வேண்டும்.

* ஷாம்புவில் புரோட்டின் இருந்தால், கூந்தலின் தரம் மேம்படும். அதன் நெகிழ்சித்தன்மை அதிகமாகும். கூந்தல் பார்க்க அழகாகத் தெரியும்.

* சுருட்டை முடிக்கு, சிக்கு விழும் கூந்தலுக்கு எனப் பிரத்யேகமான ஷாம்புக்கள் உள்ளன.

* மிகவும் வறட்சியான கூந்தலுக்கு இன்டென்ஸ் மாய்ஸ்சரைசிங் ஷாம்பு பயன்படுத்தலாம். இதில், தேங்காய் எண்ணெய், அவகேடோ எண்ணெய் கலந்திருக்கும்.

* ஷாம்பு பாட்டிலில், அவகேடோ எண்ணெய், இலாஙஇலாங் எண்ணெய், ஆலிவ், பாதாம், ரோஸ்பெர்ரி, சோயாபீன் போன்ற பல்வேறு எசன்ஷியல் எண்ணெய்கள் கலந்திருந்தால், அந்த ஷாம்புக்கள் நல்லது.

சருமம், கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்
சருமம், கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்

சோடியம் லாரத் சல்ஃபேட் (Sodium laureth sulfate), சோடியம் லாரில் சல்ஃபேட் (Sodium lauryl sulfate), பாராபின் (Paraben), ட்ரைதானோலமைன் (Triethanolamine (TEA)), அம்மோனியம் லாரில் சல்ஃபேட் (Ammonium lauryl sulfate) போன்ற கெமிக்கல்களின் பெயர் லேபிளில் இருந்தால் இயன்றவரை அந்த ஷாம்புக்களைத் தவிர்க்கலாம். இவை, கூந்தலை மோசமாகப் பாதிப்பவை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.