Travel Contest : அஜர்பைஜான் சேற்று எரிமலைகள் பற்றித் தெரியுமா?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

நாங்கள் அஜர்பைஜான் தலை நகரமான பக்கு போயிருந்தோம். எந்த ஊருக்கும் ஒரு தனித்துவம் உள்ளது. எங்களைக் கவர்ந்தது சேற்று எரிமலைகள். ஆனால் போயிருந்த மாதம்தான் தப்பு. ஜூன் மாதம் நல்ல வெயில். அதுவும் இந்த இடம் சரியான பாலைவனம் . கிலோ மீட்டர் கணக்கில் விரிந்து உள்ளது. நடுவில் கார் ரிப்பேர் ஆனால் செத்தோம்.

சேற்று எரிமலைகள்

அஜர்பைஜானின் பக்கு அருகே, குறிப்பாக கோபுஸ்தான் தேசிய பூங்காவில் அமைந்துள்ள ஒரு இயற்கை அதிசயம் சேற்று எரிமலைகள். பூங்காவிற்குள் கிட்டத்தட்ட 300 எண்ணிக்கையிலான இந்த தனித்துவமான புவியியல் அமைப்புகள், அவற்றின் மறுஉலக நிலப்பரப்பு காரணமாக பார்வையாளர்களை ஈர்க்கின்றன.

நிலத்தடி வாயுக்கள் மற்றும் திரவங்கள் மேற்பரப்புக்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்கும் போது, ​​சேற்றை வெடிக்கச் செய்யும் போது மற்றும் எப்போதாவது பற்றவைக்கக்கூடிய வாயுவை வெளியேற்றும் போது எரிமலைகள் உருவாகின்றன. 

இந்த எரிமலைகளில் பல செயலில் உள்ளன, சில சேறு மற்றும் வாயு வெடிக்கின்றன, மற்றவை ஒப்பீட்டளவில் செயலற்ற நிலையில் உள்ளன. கோபுஸ்தான் தேசிய பூங்காவில் சுமார் 300 சேற்று எரிமலைகள் அமைந்துள்ளன. 

மற்ற எரிமலைகளில் தீக்குழம்பு வரும்.ஆனால் இதில் சேறு நன்கு கொதித்து வருகிறது. பக்கத்தில் போய் பார்க்கலாம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.