பாகிஸ்தான் ராணுவத்தில் மேஜராக பணியாற்றியவர் தாஹிர் இக்பால். தற்போது பாகிஸ்தானில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் மூத்த தலைவராகவும் எம்.பி.யாகவும் இருக்கிறார். பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த தொடங்கிய போது, கடந்த 8-ம் தேதி நாடாளுமன்றத்தில் அவர் பேசினார்.
தாஹிர் இக்பால் பேசும் போது, ‘‘இந்தியாவின் தாக்குதலில் இருந்து பாகிஸ்தானை ராணுவம் காப்பாற்ற வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தானின் அனைத்து எம்.பி.க்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். ஓ அல்லா. உமக்கு முன்னால் நாங்கள் தலைவணங்கி நிற்கிறோம். தயவு செய்து இந்த நாட்டை காப்பாற்று’’ என்று உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் அழுதபடியே பேசினார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.