LIC Whatsapp Bot: இந்திய அரசுக்கு சொந்தமான ஒரு காப்பீட்டுக் குழுமம் மற்றும் முதலீட்டு நிறுவனம் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஆகும். இது இந்தியாவின் பெரிய காப்பீட்டு நிறுவனமாக திகழ்கிறது. இந்தியாவில் 2000 ஆண்டுக்குப் பிறகு இந்நிறுவனத்திற்கு போட்டியாக பல ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் உருவாகி உள்ளன. இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும், இந்நிறுவனத்தின் 10% வளர்ச்சியை எட்டுவதாக அதன் இணையத்தள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய மக்களில் பலர் இந்நிறுவனத்தின் எண்டோமென்ட், முழுஆயுள், மணிபேக், டெர்ம் அஷ்யூரன்ஸ், பென்ஷன், யூலிப், மைக்ரோ மற்றும் உடல்நல திட்டங்கள் போன்றவைகளில் அதிக முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில் அப்படி நீங்களும் இந்த நிறுவனத்தில் உங்களின் பணத்தை சேமித்து கொண்டு பிரீமியத்தை செலுத்தி வருகிறீர்கள் என்றால், இந்த கட்டுரையை கட்டாயம் படிக்கவும்.
நீங்கள் இனி எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தப் படியே WhatsApp மூலமாகவும் LIC (Life Insurance Corporation of India) பிரீமியத்தின் தொகையை எளிதாக செலுத்தலாம். ஆம், தற்போது எல்ஐசி தனது வாட்ஸ்அப் சேவையை பிரத்தியேகமாக தொடங்கியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் பாலிசியின் முழுமையான விவரங்களை நொடியில் பெறலாம், மேலும் பிரீமியத்தின் தொகையை நேரடியாக வாட்ஸ்அப்பில் செலுத்தலாம்.
நீங்கள் வாட்ஸ்அப் (Whatsapp) மூலம் எல்ஐசி (LIC) பிரீமியத்தின் தொகையை செலுத்தலாம்:
வீட்டில் இருந்தபடியே எல்.ஐ.சி பாலிசியின் பிரீமியத்தை எளிதாக செலுத்தலாம். இதை WhatsApp Bot சேவை மூலம் பூர்த்தி செய்துக் கொள்ளலாம். இதற்காக ஒரு பிரத்யேக எண் வெளியிடப்பட்டுள்ளது. எல்ஐசி பயனர்கள் ஆன்லைனில் பிரீமியத்தை செலுத்த மற்றொரு வழி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்கள், போர்டல் பயனர்கள் உரிய பாலிசியைக் கண்டறிய 8976862090 என்ற வாட்ஸ்அப் எண்ணைப் பயன்படுத்தலாம். இந்த எண்ணைப் பயன்படுத்தி UPI/நெட்பேங்கிங்/கார்டு மூலமாகவும் பணத்தை செலுத்தலாம்.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் சித்தார்த் மொஹந்தியின் கூற்றுப்படி, இந்த WhatsApp Bot சேவையின் மூலம் எல்ஐசி வைத்திருக்கும் பயனர்களுக்கு வேலை எளிதாக்க உதவும். மேலும், எல்ஐசி பிரீமியத்தை எங்கிருந்து வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் வாட்ஸ்அப் மூலம் எளிதாக தொகையை செலுத்தலாம். இந்த விருப்பத்தின் மூலம் பயனர்கள் சிறந்த சேவையைப் பெறுவார்கள். அதேபோல் இது செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் உதவும்.
எல்ஐசி வாட்ஸ்அப் Bot சேவை எவ்வாறு செயல்படும்?
எல்ஐசி (LIC) வாட்ஸ்அப் (WhatsApp) எண்ணைச் சேமிக்கவும்
வாட்ஸ்அப்பில் “ஹாய்” என்று மெசேஜ் அனுப்பவும்.
எல்ஐசியின் சாட்பாட் தானியங்கி பதிலை அளித்து விருப்பங்களைக் காண்பிக்கும்.
இதற்குப் பிறகு, நீங்கள் சேவையைப் பயன்படுத்த விரும்பும் சேவையின் முன் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை உள்ளிடவும்.
இதற்குப் பிறகு எல்ஐசி பாலிசி எண்ணை உள்ளிடவும்.
இதன் பிறகு நீங்கள் UPI/நெட் பேங்கிங்/கார்டு மூலம் பணம் செலுத்தலாம்.