இஸ்லாமாபாத்,
இந்தியா மீது பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதலை முறியடித்து வரும் இந்திய ராணுவம், பாகிஸ்தானுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இரு நாட்டு எல்லை பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், இஸ்லாமாபாத் எல்லைக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் இன்று காலை 6 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்துக்கு பெட்ரோல் பங்குகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை நிலவி வருவதால், இஸ்லாமாபாத்தில் பெட்ரோல் பங்குகளை பாகிஸ்தான் அரசு மூட உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி வரும் பாகிஸ்தானில் தற்போது பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பெட்ரோல் பங்குகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.