India Pak War: இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் மிக முக்கிய செய்தி ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்த செய்தியில் கூறியிருப்பது என்னவென்றால், மக்கள் வைத்திருக்கும் ஸ்மார்ட்போன்களில் மொபைல் இருப்பிடத்தை உடனடியாக அணைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனது. ஆனால் இதன் உண்மை என்ன என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.
இந்த செய்தி தற்போது வைரலாகுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இந்த ஸ்மார்ட்போனில் லொகேஷன் ஆன் ஆக இருக்கும் பக்ஷத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளை எளிதாக கண்டறிய முடியும். ஆனால் இதன் உண்மை தன்மையை PIB வெளிப்படுத்தியுள்ளது.
PIB உண்மைச் சரிபார்ப்பால் (PIB Fact Check) பதிவேற்றப்பட்டது:
PIB Fact Check இன் அதிகாரப்பூர்வ X தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி, “மக்கள் தங்கள் தொலைபேசிகளில் இருப்பிட சேவையை உடனடியாக அணைக்குமாறு அறிவுறுத்தும் செய்தி தற்போது வைரலாகி வருகிறது. ஆனால் இந்த தகவல் முற்றிலும் போலியானது. இந்திய அரசாங்கத்தால் அத்தகைய எந்த ஆலோசனையும் வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
A viral image is claiming that an advisory has been issued, advising people to turn off location services on their phones immediately.#PIBFactCheck
– This claim is FAKE
– No such advisory has been issued by the GoI pic.twitter.com/8GmYpKXTkJ
— PIB Fact Check (@PIBFactCheck) May 9, 2025
வைரலாகி வரும் செய்தியில் என்ன எழுதப்பட்டுள்ளது?
இது தொடர்பாக ஆன்லைனில் பரப்பப்படும் வைரல் செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டையும் தற்போது PIB உண்மைச் சரிபார்ப்புப் பதிவில் காணலாம். வைரலாகி வரும் செய்தியில், “அனைவருக்கும் வணக்கம், ஒரு முக்கியமான ஆலோசனையுடன் ஆசிரியர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் வெளிவந்துள்ளது. அதில் தொலைபேசியின் இருப்பிட சேவையை (Location Service) அணைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதிக அளவில் இருக்கும் மக்கள் தொகை கொண்ட பகுதிகளைக் கண்டறிய ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் PIB Fact Check இன் அதிகாரப்பூர்வ உண்மைச் சரிபார்ப்பு சமூக ஊடக X கைப்பிடியில் ஒரு பதிவு பகிரப்பட்டது. இந்தப் பதிவில், பாகிஸ்தான் ஆதரவு பிரச்சாரத்தைக் கொண்ட போலி சமூக ஊடகப் பதிவுகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் போர்:
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இந்தியா ‘ஆப்ரேஷன்’ சிந்தூர் எனும் பெயரில் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தியதை அடுத்து, இந்தியா இந்த பதிலடியை கொடுக்க முடிவு செய்தது. அதன்படி, மே 7ஆம் தேதி நள்ளிரவில் ஆரம்பித்த இந்த தாக்குதல் ஆரம்பித்தது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் தொடங்கியுள்ளது. இதனால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் தொடர்கிறது. அண்டை நாடான பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் இந்தியா மீது வான்வழித் தாக்குதலை நடத்த முயன்றது. அதன்படி தற்போது அனைத்து வழிகளிலும் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.