ஐபிஎல்லை இங்க நடத்தலாம் வாங்க.. பிசிசிஐ-க்கு அழைப்பு விடுத்த நாடு!

18வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இத்தொடரில் இதுவரை 58 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் 12 லீக ஆட்டங்கள் மற்றும் 4 பிளே ஆஃப் சுற்றுகள் மட்டுமே எஞ்சி உள்ளன. இதற்கிடையில் தற்போது இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளும் தங்களது தாக்குதலை தொடங்கி விட்டனர். இதனால் தர்மசாலாவில் நடந்த பஜ்சாப் – டெல்லி போட்டியும் பாதியிலேயே நிறுத்தப்பாடு வீரர்களை பாதுகாப்பாக ரயில் மூலம் அப்புறப்படுத்தினர். 

இதன் காரணமாக ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளை ஒரு வார காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த ஒரு வாரத்திற்கு பிறகு சூழ்நிலைகளை ஆராய்ந்து எஞ்சிய போட்டிகளை நடத்துவதற்கான முடிவை எடுப்போம் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள ஐபிஎல் தொடரை இங்கிலாந்தில் நடத்துங்கள் என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் ஆலோசனை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இங்கிலாந்தில் ஐபிஎல் தொடரை நடத்தி முடிக்க முடியுமா? என்று கேட்டால் எனக்கு அது ஆச்சரியமாக உள்ளது. எங்களிடம் எல்லா மைதானங்களும் உள்ளன. ஒருவேளை ஐபிஎல் தொடரை நீங்கள் இங்கிலாந்து நடத்த முடிவு செய்தால், இந்திய வீரர்கள் அடுத்ததாக நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடர்காக அங்கே இருக்கலாம். இது ஒரு யோசனை என்று அவர் பதிவிட்டுள்ளார். அதேபோல் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி ரிச்சர்ட் கோல்ட், ஐபிஎல் தொடரை நடத்த இங்கிலாந்து தயாராக இருப்பதாக கூறியதாக சொல்லப்படுகிறது. 

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இதுவரையிலாக சிறப்பாக விளையாடி, குஜராத் டைடன்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16 புள்ளிகளுடன் முறையே முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ளன. இவர்களை தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் 15 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி 14 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிங்க: இந்த ஐபிஎல் உடன் ஓய்வை அறிவிக்கும் 6 முக்கிய வீரர்கள்! யார் யார் தெரியுமா?

மேலும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்! விராட் கோலி எடுத்த முக்கிய முடிவு?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.