உங்கள் போனில் டெலீட் ஆன புகைப்படங்களை மீண்டும் பெறுவது எப்படி?

Smartphone Tips Tamil : சில நேரங்களில் தொலைபேசியிலிருந்து தேவையற்ற புகைப்படங்களை நீக்கும்போது, ஸ்டோரேஜூக்கு தேவையான இடத்தை காலி செய்யும் போது, சில முக்கியமான புகைப்படங்களும் தவறுதலாக நீக்கப்படும். இது பலருக்கும் நடந்திருக்கிறது. உங்களுக்கு நடந்திருந்தால் நீங்கள் இனி கவலைப்படாதீர்கள். அதனை மீட்டெடுக்க முடியும். இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன்கள் அழைப்புகளைச் செய்வதற்கு மட்டுமல்ல, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுப்பதற்கு என மல்டி டாஸ்கிங் செய்யும் சூப்பர் கம்ப்யூட்டராக மாறிவிட்டது. முக்கியமான எல்லா தரவுகளையும் அவற்றில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். அப்படி சேமித்து வைக்கும்போது தவறுதலாக முக்கியமான புகைப்படங்களை டெலிட் செய்ய வாய்ப்பு இருக்கிறது. அதனை  எப்படி மீட்டெடுக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Recycle Bin ஆப்சன்

முதல் மற்றும் எளிதான வழி உங்கள் தொலைபேசியின் Recycle Bin-ல் அங்கு டெலிட் செய்யப்பட்ட புகைப்பட்டங்கள் மற்றும் கோப்புகள் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். ஏனென்றால்,  நீக்கப்பட்ட புகைப்படங்கள் சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு Recycle Bin-ல் சேமிக்கப்படும். மொபைலில் கேலரிக்குச் சென்று Recycle Bin ஆப்சனை திறக்கவும்.  ஒருவேளை உங்கள் நீக்கப்பட்ட புகைப்படங்கள் அங்கே இருக்கலாம். நீங்கள் அதைக் கண்டுபிடித்தால், அதை எளிதாக மீட்டெடுக்கலாம்.

நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் புகைப்படத்தைக் கிளிக் செய்து, பின்னர் Restore விருப்பத்தைக் கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு உங்கள் புகைப்படம் கேலரிக்குத் திரும்பும். இருப்பினும், நீக்கப்பட்ட பிறகு, புகைப்படம் 30 நாட்களுக்கு மட்டுமே Recycle Bin-ல் இருக்கும். இதற்குப் பிறகு புகைப்படம் மீட்டெடுக்கப்படாமல் போகலாம்.

வேறு வழி ஏதேனும் இருக்கிறதா?

நீங்கள் Google Photos, Dropbox, OneDrive அல்லது வேறு கிளவுட் ஸ்டோரேஜ் சேவையைப் பயன்படுத்தினால், உங்கள் புகைப்படங்கள் தானாகவே அங்கு காப்புப் பிரதி எடுக்கப்படும். இந்த செயலிகளைத் திறப்பதன் மூலம் உங்கள் நீக்கப்பட்ட புகைப்படங்களைக் அங்கே இருக்கிறதா என்பதை  ஒருமுறை தேடிப்பார்க்கவும். காப்புப்பிரதிகள் (backup) இருந்தால், அவற்றை உங்கள் தொலைபேசியில் பதிவிறக்கம் செய்யலாம். இல்லையென்றால் பேமெண்டு  கொடுத்து மூன்றாம் தரப்பு செயலிகள் வழியாக எடுக்கலாம். ஆனால் அது ரிஸ்க். உங்களின் தனிப்பட்ட தகவல்கள் வேறொருவருக்கு செல்ல வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.