ஐபிஎல் போட்டி மீண்டும் தொடங்கினாலும்… இந்த நாட்டு வீரர்கள் இருக்க மாட்டார்கள்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மிகப்பெரிய போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி தரம்சாலாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த பொது பாதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து வீரர்கள் பாதுகாப்பாக டெல்லிக்கு அனுப்பப்பட்டனர். மேலும் ஐபிஎல் 2025 தொடர் தற்காலிகமாக SUSPEND செய்யப்படுவதாகவும் பிசிசிஐ அறிவித்து இருந்தது. இந்நிலையில் தற்போது போர் பதற்றம் குறைந்துள்ளதால் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் ஐபிஎல் போட்டிகளை மீண்டும் தொடங்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.

மேலும் படிங்க: பாதியில் நின்ற பஞ்சாப் டெல்லி போட்டி ரிசல்ட் என்ன? பிசிசிஐ அந்தர் பல்டி!

ஆனால் உடனடியாக ஐபிஎல் போட்டிகள் தொடங்கினாலும், சில வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் விளையாட வர மாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது சில ஐபிஎல் அணிகளில் உள்ள அனைத்து வீரர்களும் தங்களது சொந்த ஊருக்கு கிளம்பியுள்ளனர். ஐபிஎல் தாண்டி பாகிஸ்தானில் நடைபெற்று வந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடி வந்த ஆஸ்திரேலியா வீரர்கள் ஏற்கனவே துபாய் சென்று அங்கிருந்து தங்களது நாட்டிற்கு திரும்பி உள்ளனர். ஐபிஎல் இந்த வாரமே தொடங்கினாலும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து வீரர்கள் மீண்டும் வந்து விளையாட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியா வீரர்கள் வருவது சந்தேகம்!

பாகிஸ்தானின் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டாலும் இந்தியாவில் வந்து மீண்டும் ஐபிஎல் 2025 போட்டிகளில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா வீரர்கள் உடன்பட மாட்டார்கள் என்று ஆஸ்திரேலியாவில் உள்ள பத்திரிகைகள் தெரிவித்துள்ளது. வேறு நாடுகளுக்கு இந்தியா ஐபிஎல் போட்டிகளை மாற்றினால் ஆஸ்திரேலியா வீரர்கள் வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐபிஎல்லில் இன்னும் மீதம் 16 போட்டிகள் உள்ள நிலையில் சன்ரைசஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறி உள்ளது. இந்த் 3 அணிகளுக்கும் இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளது. பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோர் இந்த மூன்று அணியுடன் ஒப்பந்தத்தில் உள்ளனர்.

மேலும் மிட்செல் ஸ்டார்க், மிட்செல் மார்ஷ், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் இதர ஆஸ்திரேலியா வீரர்கள் மற்ற அணிகளுக்காக விளையாடி வருகின்றனர். வரும் மே 25ம் தேதியுடன் ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்த இருந்த நிலையில், பாதியில் நிறுத்தப்பட்டதால் தற்போது தள்ளிப் போக வாய்ப்புள்ளது. ஜூன் முதல் வாரம் வரை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஜூன் 11ம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற உள்ளதால் இருநாட்டு வீரர்களுக்கு டெஸ்ட் போட்டிக்கு பயிற்சி பெறுவதற்காக முன்பே கிளம்புவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் சில அணிகளின் காம்பினேஷன் உடைய வாய்ப்புள்ளது.

மேலும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் கவாஸ்கர், சச்சின், விராட் கோலியால் முறியடிக்கப்படாத இந்திய பேட்ஸ்மேனின் சாதனை..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.