இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர் அவரது கிரிக்கெட் கரியரில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். டெஸ்ட், ஒன்-டே, டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக சர்வதேச போட்டிகளில் 82 சதங்களை அடித்து கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படும் சச்சினுக்கு அடுத்தப்படியாக உள்ளார் விராட் கோலி. இச்சூழலில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக பிசிசிஐ-யிடம் தெரிவித்து இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
இவர் இந்த விருப்பத்தை தெரிவிப்பதற்கு முந்தய நாள் தான் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டியில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். அவரை தொடர்ந்து இவரும் ஓய்வு முடிவை பிசிசிஐ-யிடம் தெரிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இந்திய அணி சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் கடுமையாக செளதப்பி வருகிறது. கடைசியாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான தோல்வியை சந்தித்தது. அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சம்ரா பேட்டிங்கிலும் ஒன்றும் செய்யவில்லை. படுமோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.
இதன் காரணமாக இனி ரோகித் சர்மாவுக்கு டெஸ்ட் அணியில் இடம் அளிக்க போவதில்லை என்ற முடிவை பிசிசிஐ எடுத்ததாகவும் இதை அறிந்த விராட் கோலி, அடுத்த நிரந்தர கேப்டனை நியமிக்கும்வரை தான் அணியை வழிநடத்த தயாராக இருப்பதாக தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், இந்திய அணிக்கு இளம் வீரரைதான் கேப்டனாக நியமிக்க உள்ளோம் என பிசிசிஐ திட்டவட்டமாக இருந்துள்ளது. இதனால்தான் விராட் கோலி ஓய்வு முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த முடிவை பிசிசிஐ எதிர்பார்க்கவில்லை.
இதன் காரணமாக விராட் கோலியின் ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் விராட் கோலி என்ன முடிவெடுப்பார் என அனைவரும் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும், விராட் கோலி இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளை விளையாடி உள்ளார். அதில் 46.85 சராசரியுடன் 9,230 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்சமாக 254 ரன்களையும் 31 அரைசதங்கள் மற்றும் 30 சதங்களையும் விளாசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: IPL 2025 Loss : ஐபிஎல் ரத்து, பிசிசிஐ-க்கு ஒரு வாரத்தில் ஏற்பட்ட இழப்பு – இத்தனை கோடிகளா?
மேலும் படிங்க: ஐபிஎல் தொடர் நடக்கபோகுது இடம் இதுதான்.. பிசிசிஐ அதிரடி!