IPL 2025 Loss : ஐபிஎல் 2025 போட்டிகள் ஒரு வாரம் தற்காலிமாக நிறுத்தப்பட்டதால் பிசிசிஐ-க்கு 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொகையின் அளவு இன்னும் கூடுதலாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவைப் பொறுத்தவரை பணம் கொட்டும் கிரிக்கெட் லாட்டரி திருவிழா ஆகும். இந்த திருவிழா இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அதிகரித்த பதற்றம் காரணமாக ஒருவாரம் ஒத்திவைக்கப்பட்டது. குறிப்பாக, தரம்சாலாவில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையேயான போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பின் எல்லா அணி பிளேயர்களும் சொந்த நாடுகளுக்கு திரும்பினர். இப்போது இயல்பு நிலைதிரும்பிக் கொண்டிருப்பதால் மீண்டும் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
பிசிசிஐக்கு என்ன செலவாகும்?
ஒவ்வொரு ஐபிஎல் போட்டியும் டிவி ஒப்பந்தங்கள், டிக்கெட் விற்பனை, ஸ்பான்சர்கள் மற்றும் உணவு கடைகள் என எல்லா வழிகளிலும் வருவாய் வருகிறது. அதேநேரத்தில் ஒரு போட்டியை நடத்த சுமார் ரூ. 100 முதல் 125 கோடி வரை செலவாகும். அந்த போட்டிகள் ரத்து செய்யப்பட்டால் அது பிசிசிஐக்கு இழப்பு தான். இன்சூரன்ஸ் மூலம் சில கோடிகளை கிளைம் செய்ய முடியும் என்றாலும் குறைந்தபட்சம் ஒரு போட்டிக்கு பிசிசிஐக்கு 60 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். அந்தவகையில், இந்த ஒரு வார இடைவெளியில் ஐபிஎல் போட்டிகள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்துக்கு தோராயமாக 300 முதல் 420 கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்திருக்கக்கூடும்.
ஸ்பான்சர்கள் மற்றும் ஒளிபரப்பு பாதிப்பு
TATA போன்ற பெரிய ஸ்பான்சர்களும், JioHotstar போன்ற ஒளிபரப்பாளர்களும் இழப்பை சந்தித்துள்ளனர். ஒருவார காலத்தில் விளம்பரம் மூலம் வரவேண்டிய வருவாய் அந்த நிறுவனங்களுக்கு கிடைக்காது. அப்படியே மீண்டும் போட்டிகள் நடத்தப்பட்டால் கூட பண வீக்க மதிப்பின் அடிப்படையில் சந்தை மதிப்பில் சில நூறு கோடிகளை இந்த நிறுவனங்கள் கட்டாயம் இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.
ஐபிஎல் அணிகளுக்கான பாதிப்பு
ஐபிஎல் அணிகளுக்கும் ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டது மிகப்பெரிய இழப்பு தான். ஒவ்வொரு அணிக்கும் ஸ்பான்சர்கள், விளம்பர வருவாய் இருக்கிறது. அதேபோல் டிக்கெட் புக்கிங், ஒளிபரப்பு ஆகியவற்றிலும் கணிசமான தொகை வரும். அவையெல்லாம் ஐபிஎல் தொடரில் உள்ள அனைத்து அணிகளுக்கும் இழப்பை கொடுக்கும். மீண்டும் ஐபிஎல் தொடங்கினாலும், போட்டி அட்டவணை, மைதானம் மாற்றங்கள் காரணமாக வருவாய் இழப்பை அவர்கள் கட்டாயம் சந்திப்பார்கள்.
ஐபிஎல் 2025 எஞ்சிய போட்டிகள்
ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி உட்பட இன்னும் 16 போட்டிகள் மீதமுள்ளன. இந்த போட்டிகளை எங்கு நடத்தலாம் என பிசிசிஐ தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. மீண்டும் நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகளில் கட்டாயம் அட்டவணை மற்றும் மைதானம் மாற்றம் இருக்கப்போகிறது. சென்னை, பெங்களூரு ஹைதராபாத் மைதானங்களில் மட்டும் இந்த போட்டிகளை நடத்த பிசிசிஐ ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிங்க: பாதியில் நின்ற பஞ்சாப் டெல்லி போட்டி ரிசல்ட் என்ன? பிசிசிஐ அந்தர் பல்டி!
மேலும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் கவாஸ்கர், சச்சின், விராட் கோலியால் முறியடிக்கப்படாத இந்திய பேட்ஸ்மேனின் சாதனை..!