கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில் பங்கேற்க பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் திட்டமிட்டார். இதற்காக புதூர் மண்மலைமேடு பகுதியிலுள்ள கட்சி நிர்வாகி வீட்டில் தங்கினார். அதிகாலை கள்ளழகரை தரிசிக்க போவதாக அறிந்த போலீஸார் அவரை வீட்டு காவலில் வைத்தனர்.
அவர் கூறுகையில், ‘தர்கா, மசூதி எங்கு சென்றாலும் காவல்துறை தடை விதிக்கிறது. மத நல்லிணக்கத்திற்காக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண வந்தேன். அதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. மதுரையில் மட்டும் 18 முறை கைதாகி உள்ளேன்,’ என்றார்.
போலீஸ் தரப்பில் கேட்டபோது, ‘ கன்னியாகுமரி செல்வதற்காக அவர் மதுரை வந்தபோது, முன்னேற்பாடு இன்றி கள்ளழகர் திருவிழாவுக்கு செல்ல விரும்பியதால் போக வேண்டாம், ’ என்றனர்.