Virat Kohli Retirement: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாதத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட உள்ளனர். இத்தொடர் ஜூன் 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணி இம்மாதம் இறுதியில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக விராட் கோலி இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று (மே 12) திடீரென தனது ஓய்வை அறிவித்தார். இச்சூழலில் விராட் கோலி இறங்கும் 4வது இடத்தில் சில வீரர்களை இறக்க பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. சர்ஃபராஸ் கான், கே.எல்.ராகுல், ரஜத் படிதார், ஸ்ரேயாஸ் ஐயர், சாய் சுதர்சன் ஆகியோரில் யாரை இறக்கினால் சரியாக இருக்கும் என்ற சிந்தனையில் பிசிசிஐ இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சர்ஃபராஸ் கான்
சர்ஃபராஸ் கான் சமீப காலமாக ரெட் பால் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ரஞ்சி டிராபியில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக கடந்த ஆண்டு இந்திய அணியில் விளையாட அழைப்பு வந்தது. ஆண்டின் பிற்பகுதியில் நியூசிலாந்திற்கு எதிராக தனது முதல் சதத்தை அடித்ததன் மூலம் அவர் தனது வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், விராட் கோலியை மாற்றுவதற்கும், இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டருக்கு உறுதியை வழங்குவதற்கும் அவர் ஒரு வலுவான போட்டியாளராக இருக்க முடியும்.
கே.எல். ராகுல்
அணியின் தேவைக்கேற்ப தனது பேட்டிங் நிலையை மாற்றிக் கொள்வதை KL ராகுல் வழக்கமாகக் கொண்டுள்ளார். தொடக்க வீரராக களமிறங்குவது முதல் 5வது இடத்தில் விளையாடுவது அல்லது 6வது இடத்தில் விளையாடுவது வரை, ராகுல் அனைத்தையும் செய்துள்ளார். விராட்டின் ஓய்வு 4வது இடத்தில் ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தியதால், ராகுல் மீண்டும் அந்தப் பாத்திரத்தை ஏற்பார் என்று கருதலாம். ராகுலின் ஃபார்ம் சமீப காலமாக மிகவும் சிறப்பாக உள்ளது, மேலும் இங்கிலாந்துக்கு எதிராக, அவர் அணிக்கு ஒரு புதிய பாத்திரத்தில் தன்னைக் காணலாம்.
ரஜத் படிதார்
விராட் கோலியின் இடத்திற்கான போட்டியில் ரஜத் படிதார் இருப்பார் என கூறப்படுகிறது. இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு அறிமுகமானார். இதுவரை 3 போட்டிகள் விளையாடிய நிலையில், வெறும் 63 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயர்
ஷ்ரேயாஸ் ஐயருக்கு இது ஒரு சிறப்பான ஆண்டாகும். உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர் சிறப்பாக செயல்பட்டதன் விளைவாக அவருக்கு தேசிய அளவில் அழைப்பு விடுக்கப்பட்டது, மேலும் BCCI மத்திய ஒப்பந்தங்களுக்கும் திரும்பினார். சாம்பியன்ஸ் டிராபியில் அவர் சிறப்பாக செயல்பட்டார், மேலும் அவர் 4வது இடத்தில் விராட் கோலியை மாற்றுவதற்கு சரியான வேட்பாளராக மாற முடியும்.
சாய் சுதர்சன்
இந்திய டெஸ்ட் தொடரில் விராட் கோலி இடத்தில் சாய் சுதர்சனை விளையாட வைக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இவரை ரோகித் சர்மா இடத்திலும் இறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஓப்பனராக களம் இறக்க ஆலோசித்து வருதாக தகவல் வெளியாகி உள்ளது. சாய் சுதர்சன் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்து டாப் 5 வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இந்த ஆண்டு 11 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 509 ரன்களை குவித்துள்ளார். மேலும் குஜராத் அணியின் வெற்றிக்கு சாய் சுதர்சனம் ஒரு முக்கிய காரணம்.
மேலும் படிங்க: Virat Kohli: ஓய்வுபெற்றார் விராட் கோலி… இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு… ரசிகர்கள் வருத்தம்
மேலும் படிங்க: விராட் கோலியின் ஓய்வுக்கு கம்பீர் தான் காரணமா? என்ன செய்தார்?