இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. கிரிக்கெட் வரலாற்றில் இவர் பல அசாத்திய சாதனைகளை படைத்துள்ளார். இந்த நிலையில், இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருப்பது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஏற்கனவே இவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார். இன்னும் ஒருநாள் போட்டியில் மட்டும் ஓய்வை அறிவிக்காமல் உள்ளார். விராட் கோலி நல்ல ஃபிட்னஸுடன் இருக்கும் நிலையில், அவர் இன்னும் 2,3 ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 சதங்கள் மற்றும் 31 அரைசதங்களையும் அடித்துள்ளார். மொத்தமாக சர்வதேச போட்டிகளில் இவர் 82 சதங்களை அடித்துள்ளார். இவர் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் அடித்த சாதனையை சமன் செய்வார் எனவும் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருப்பதால், அந்த சாதனையை சமன் செய்ய முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது.
கம்பீரின் செயல்பாடு சரியில்லை
இந்த நிலையில், கம்பீரின் செயல்பாடு பிடிக்காமலேயே விராட் கோலி அணியை விட்டு வெளியேறுவதாக கூறப்படுகிறது. அதாவது கம்பீர் தானாகவே ஒரு முன்முடிவை எடுத்துவிட்டு வீரர்களை நடத்துவதாக மூத்த வீரர்கள் நினைப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே விராட் கோலி வெறும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடினால் போதும் என முடிவு எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
அதேசமயம் ரோகித் சர்மா ஓய்வை அறிவித்ததை அடுத்து விராட் கோலி அணியை வழிநடத்தாலாம் என நினைத்து பிசிசிஐயிடம் கூறியுள்ளார். ஆனால் பிசிசிஐ அதை மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த விராட் கோலி, ஓய்வு முடிவை எடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், விராட் கோலி அவரது குடும்பத்துடன் நேரம் செலவட விருப்பம் தெரிவிக்கிறார்.
மேலும் படிங்க: Virat Kohli: ஓய்வுபெற்றார் விராட் கோலி… இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு…!
மேலும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக விராட் கோலி செய்த 5 சம்பவங்கள்!