ரோம்,
பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ள இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – செக் குடியரசின் ஆடம் பாவ்லாசெக் ஜோடி, நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் – குரோஷியாவின் நிகோலா மெக்டிக் ஜோடியுடன் மோதியது.
இந்த போட்டியின் முதல் செட்டை 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த போபண்ணா ஜோடி இழந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த செட்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போபண்ணா ஜோடி 7-6 (7-5), 10-4 என்ற புள்ளிக்கணக்கில் நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் – குரோஷியாவின் நிகோலா மெக்டிக் ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறியது.