பாகிஸ்தான் ராணுவத்தின் 51 இடங்களை தாக்கினோம்: பலுசிஸ்தான் விடுதலைப் படை தகவல்

குவெட்டா: பாகிஸ்​தானின் தென்​மேற்​கில் உள்ள பலுசிஸ்​தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க கோரி பலுசிஸ்​தான் விடு​தலைப் படை (பிஎல்ஏ) என்ற பெயரில் கிளர்ச்​சி​யாளர்​கள் பல ஆண்​டு​களாக போராடி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யல் பிஎல்ஏ செய்​தித் தொடர்​பாளர் ஜீயந்த் பலூச் நேற்று கூறுகை​யில், ‘‘இந்​தியா – பாகிஸ்​தான் இடையே போர் பதற்​றம் உச்​சத்​தில் இருந்​த​போது ஆக்​கிரமிப்பு பலுசிஸ்​தானில் பாகிஸ்​தான் ராணுவம் மற்​றும் ஐஎஸ்ஐ உளவு அமைப்​புக்கு எதி​ராக 71 ஒருங்​கிணைந்த தாக்​குதல்​களை பிஎல்ஏ நடத்​தி​யது.

சமீபத்​திய இந்த தாக்​குதல் 51-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் பல மணி நேரம் நீடித்​தது. எதிரியை அழிப்​பது மட்​டுமே இந்த தாக்​குதலின் நோக்​கமல்ல. தற்​காப்பு நிலைகள் மற்​றும் தயார்​நிலையை வலுப்​படுத்​து​வதும் இதன் நோக்​க​மாகும்” என்​றார்.

இந்​தி​யா​வின் ஆதரவை நாங்​கள் பெற்​றால் இந்த தீவிர​வாத அரசை (பாகிஸ்​தானை) பலூச் தேசத்​தால் ஒழிக்க முடி​யும். இது, அமை​தி​யான, வளமான மற்​றும் சுதந்​திர பலுசிஸ்​தான் உரு​வாக வழி வகுக்​கும் என்று பிஎல்ஏ கூறியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.