உங்கள் குழந்தைகளுக்கு பான் கார்டு.. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

Apply PAN Card for Minors In Online: இந்தியாவில் ஆதார் அட்டைகளைப் போலவே, பான் (Permanent Account Number) அட்டைகளும் ஒரு அத்தியாவசிய நிதி ஆவணமாக மாறியுள்ளது. இந்த பான் அட்டையானது வங்கிக் கணக்கைத் திறப்பது முதல் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது , வரிகளைத் தாக்கல் செய்வது வரை அனைத்து அரசு சார்ந்த காரியங்களுக்கும் பான் அட்டை தேவைப்படுகிறது. அதன்படி இந்த நிதி பரிவர்த்தனைகளுக்கு பான் அட்டை மிகவும் முக்கியமானது.

இந்நிலையில் தற்போது குழந்தைகளுக்கு ஆதார் அட்டைகளைப் போலவே, பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம், இது சிறு வயதிலிருந்தே முதலீட்டு நோக்கங்களுக்காகவோ அல்லது நிதி திட்டமிடலுக்காகவோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

சிறார்களுக்கு பான் கார்டு ஏன் அவசியம் | Why a PAN Card is Essential for Minors?
இன்றைய டிஜிட்டல் பொருளாதார காலக்கட்டத்தில், பணம் அல்லது வருமானம் சம்பந்தப்பட்ட அனைத்து நிதி நடவடிக்கைக்கும் பான் கார்டு மிகவும் அவசியம் ஆகும். உங்கள் குழந்தையின் சார்பாக பங்குச் சந்தை அல்லது பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்ய நீங்கள் திட்டமிட்டுக் கொண்டு இருந்தால், உங்களிடம் பான் கார்டு இருக்க வேண்டியது அவசியமாகும். மேலும், உங்கள் குழந்தையின் வயது 18க்கு மேல் எட்டியவுடன் புதிய பான் கார்டுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

பான் கார்டு விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள்:
அடையாளச் சான்று: ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட்
முகவரிச் சான்று: ஆதார் அட்டை
பிறந்த தேதிச் சான்று: பிறப்புச் சான்றிதழ் அல்லது ஏதேனும் அதிகாரப்பூர்வ ஆவணம்
மைனரின் பிறப்புச் சான்றிதழ்: குழந்தையின் வயதைச் சரிபார்க்கும் ஆவணம்.

மைனர் பான் கார்டுக்கு எப்படி விண்ணப்பிப்பது?
நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மைனர் குழந்தைக்கு PAN கார்டுக்கு எளிதாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது என்று பார்ப்போம் :

NSDL வலைத்தளத்தைப் பார்வையிடவும்: PAN அட்டை விண்ணப்பங்களுக்கு அதிகாரப்பூர்வ NSDL வலைத்தளத்திற்குச் செல்லவும்.

PAN கார்டு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்: முகப்புப் பக்கத்தில், “Apply for PAN” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். “Indian Citizen” பிரிவின் கீழ் “இந்திய குடிமகன்” மற்றும் “Individual” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

மைனரின் விவரங்களை உள்ளிடவும்: பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி போன்ற குழந்தையின் விவரங்களை வழங்கவும்.

தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்: ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ் மற்றும் முகவரிச் சான்று போன்ற தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றவும்.

கட்டணம் செலுத்தவும்: PAN கார்டு விண்ணப்பத்திற்கான ஆன்லைன் கட்டணத்தை நிரப்பவும்.

படிவத்தைச் சமர்ப்பிக்கவும்: படிவத்தை பூர்த்தி செய்து கட்டணங்களைச் செலுத்திய பிறகு, சரிபார்ப்புக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.

விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டவுடன், அதிகாரிகள் ஆவணங்களைச் சரிபார்ப்பார்கள். பின்னர் பான் கார்டு வழங்கப்படும். பான் கார்டை இரண்டு வடிவங்களில் பெறலாம்:

Physical PAN Card: பான் கார்டின் நகல் உங்கள் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பப்படும்.

e-PAN: NSDL வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யக்கூடிய பான் கார்டின் மின்னணு பதிப்பு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.