டிரினிடாட்,
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகளும் அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடக்கின்றன.
இந்நிலையில், இந்த தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஹேலி மேத்யூஸ் கேப்டனாகவும், ஷெமைன் காம்ப்பெல்லே துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்: ஹேலி மேத்யூஸ் (கேப்டன்), ஷெமைன் காம்ப்பெல்லே (துணை கேப்டன்), ஆலியா அலீன், ஜஹ்ஸாரா கிளாக்ஸ்டன், அபி பிளெட்சர், செர்ரி அன் பிரேசர், ஷபிகா கஜ்னாபி, ஜன்னில்லியா கிளாஸ்கோ, ரியாலினா கிரிம்மண்ட், ஜைதா ஜேம்ஸ், கியானா ஜோசப், மான்டி மங்ரு, அஷ்மினி முனிசார், கரிஷ்மா ராம்ஹராக், ஸ்டாபானி டெய்லர்.
டி20 போட்டிகள் விவரம்:
முதல் டி20 போட்டி – மே 21
2வது டி20 போட்டி – மே 23
3வது டி20 போட்டி – மே 26
ஒருநாள் போட்டிகள் விவரம்:
முதல் ஒருநாள் போட்டி – மே 30
2வது ஒருநாள் போட்டி – ஜூன் 4
3வது ஒருநாள் போட்டி – ஜூன் ௭