LIC Premium Payment: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) முதலீட்டாளர்களுக்கு பல்வேறு வகையான காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகிறது. இவற்றில் ஆயுள் காப்பீடு, சுகாதார காப்பீடு மற்றும் ஓய்வூதியம் தொடர்பான திட்டங்கள் போன்றவை அடங்கும். LIC நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாகும். மேலும் LIC ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பாலிசிகளை வெளியிடுகிறது. எந்தவொரு பாலிசியை பெற வேண்டுமானாலும், நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை பிரீமியமாக டெபாசிட் செய்ய வேண்டும்.
முதிர்வு நேரத்தில் எவ்வளவு பணம் கிடைக்கும்?
முதிர்வு நேரத்தில் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது நாம் டெபாசிட் செய்யும் தவணைகளைப் பொறுத்தது. இப்போது இந்த பிரீமியத்தை உடனடி சேட் செயலியான WhatsApp மூலமாகவும் செலுத்தலாம். WhatsApp மூலம் LIC பிரீமியத்தை செலுத்துவதற்கான முழுமையான செயல்முறையை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
WhatsApp மூலம் LIC பிரீமியத்தை செலுத்துவது எப்படி?
பாலிசிதாரர் WhatsApp மூலம் LIC பிரீமியத்தை செலுத்த விரும்பினால், Hi என்று எழுதி 8976862090 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதற்குப் பிறகு, வரும் அனைத்து விருப்பங்களிலிருந்தும் உங்களுக்குத் தேவையான விருப்பத்தைத் தேர்வுசெய்யவும். ஆனால் இந்த சேவை அல்லது நன்மையைப் பெற, நீங்கள் LIC போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும்.
நீங்கள் ஏற்கனவே LIC போர்ட்டலில் பதிவு செய்திருந்தால், நிலுவையில் உள்ள பிரீமியத்தையும் காண்பீர்கள். இதனுடன், பணம் செலுத்துவதற்கான பல்வேறு விருப்பங்களையும் காண்பீர்கள். பணம் செலுத்திய பிறகு, உங்களுக்கு ஒரு ரசீதும் கிடைக்கும். WhatsApp மூலம் LIC பிரீமியத்தை செலுத்தும் இந்த முறை, உங்கள் பிரீமியத்தை எங்கிருந்து வேண்டுமானாலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செலுத்த ஒரு வசதியான வழியாக இருக்கும்.
How to register on the LIC portal: LIC போர்ட்டலில் பதிவு செய்வது எப்படி
நீங்கள் LIC போர்ட்டலுக்கு புதியவராக இருந்தால், இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றி LIC போர்ட்டலில் பதிவு செய்யலாம்:
– முதலில், LIC வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும்.
– இங்கே நீங்கள் ‘Customer Portal’ என்ற விருப்பத்தைக் காண்பீர்கள்.
– அதைக் கிளிக் செய்யவும்.
– இதற்குப் பிறகு, ‘New User’ என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
– அதன் பின்னர் பெயர், பாலிசி எண் போன்ற தேவையான தகவல்களை உள்ளிட்டு பதிவு செய்யவும்.
– அதன் பிறகு நீங்கள் ‘Basic Service’ என்ற விருப்பத்திற்குச் சென்று ‘Add policy’ என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
– உங்கள் அனைத்து பாலிசிகளையும் இங்கே சேர்க்கவும்.
– நீங்கள் பிரீமியம் சேவையைப் பெற விரும்பினால், பதிவு படிவத்தை நிரப்பி அதைப் பெறலாம்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள செயல்முறை அடிப்படை சேவையைப் பயன்படுத்துவதற்கானவை. பிரீமியம் சேவையைப் பெற, படிவம் உட்பட பல முக்கியமான ஆவணங்களை நிரப்ப வேண்டும். சரிபார்ப்பிற்குப் பிறகுதான் நீங்கள் பிரீமியம் சேவையைப் பெற முடியும். ஆனால் வாட்ஸ்அப் மூலம் பிரீமியத்தை செலுத்த, நீங்கள் எல்ஐசி போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும்.