அமலுக்கு வந்த புதிய விதி.. ஐபிஎல் அணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!

2025 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கிடையில் இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக மே 8ஆம் தேதி ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தப்பட்டதால் வரும் 17ஆம் தேதி ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க உள்ளது. இதில் சில வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

இந்த நிலையில், ஐபிஎல் நிர்வாகம் ஒரு அதிரடி விதியை அறிவித்துள்ளது. அதாவது ஒவ்வொரு அணியிலும் தற்போது விலகி உள்ள வெளிநாட்டு வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்த தற்காலிக வீரர்களை இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வரை மட்டுமே அந்த அணி பயன்படுத்திக்கொள்ள முடியும். இவர்களை எந்த அணியும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர்காக தக்க வைத்துக்கொள்ள முடியாது என கூறப்பட்டுள்ளது. 

அதேபோல் எஞ்சிய போட்டிகளில் விளையாட முடியாது என விலகிய வீரர்களை அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு தக்க வைக்க விரும்பினால், தக்க வைத்துக்கொள்ளலாம். இதுவே இந்த புது விதி மாற்றம் ஆகும். இந்த விதி ஐபிஎல் அணிகளுக்கு சற்று நிமதியை தந்துள்ளது. ஏனென்றால், இந்த விதியின் மூலம் மாற்று வீரர்களை அவர்களால் தேர்வு செய்துக் கொள்ள முடியும். 

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்கள் இன்னும் 12 போட்டிகளே  மீதமுள்ளன. பிளே சுற்றுக்கு பின்னர் ஜூன் 3ஆம் தேதி இத்தொடரின் இறுதி போட்டி நடைபெற உள்ளது. சென்னை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 3 அணிகள் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்டது. மீதமுள்ள 7 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்காக போட்டி போட்டு வருகிறது. 

மேலும் படிங்க: கடைசி வரை விராட் கோலியால் இந்த ஒரு சாதனையை பூர்த்தி செய்ய முடியவில்லை!

மேலும் படிங்க: இந்த சிஎஸ்கே வீரர் அணிக்கு திரும்புவது சந்தேகம் தான்? என்ன செய்யப் போகிறது நிர்வாகம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.