ரோம்,
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் லோரென்சோ முசெட்டி (இத்தாலி), அலெக்சாண்டர் சுவரெவ் (ஜெர்மனி) உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டமுசெட்டி 7-6 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இவர் அரையிறுதியில் கார்லஸ் அல்காரஸ் உடன் மோத உள்ளார்.
Related Tags :