18வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்கிடையில் ஏப்ரல் 22ஆம் தேதி பகல்காமில் பாகிஸ்தானின் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியது. இதன் காரணமாக ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதையடுத்து போர் முடிவுக்கு வந்ததால், ஐபிஎல் தொடர் மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை முதல் (மே 17) ஐபிஎல்லின் எஞ்சிய போட்டிகள் நடைபெற உள்ளது. எஞ்சிய போட்டிகளில் முதல் போட்டியாக 58வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளன. இப்போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், நாளை மாலை பெங்களூருவில் கனமழை பெய்யும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த இரு அணிகளுக்கான போட்டி நடைபெறுவதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்பனவே நேற்று (மே 15) மழை பெய்ததால், பயிற்சி செய்யக்கூட வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மைதானத்தில் தண்ணீர் தேங்கி இருந்ததால், அதில் ஆர்சிபி வீரர் டிம் டேவிட் ஓடி ஆடி வைப் செய்ததை நாம் அனைவரும் பார்த்தோம்.
இதனால் நாளையும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்சிபி அணி 11 போட்டிகளில் 8ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்னும் 3 போட்டிகள் மீதமுள்ளன. அதில் ஒரு போட்டியில் வென்றால் கூட ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும். அதேசமயம் கொல்கத்தா அணி 12 போட்டிகளில் 5ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி அடுத்த இரண்டு போட்டிகளில் நல்ல வெற்றியை பெற்றால் மட்டுமே அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதை நினைத்து பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: ஐபிஎல் 2025 : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு விழுந்த அடி.. 3 முக்கிய பிளேயர்கள் இல்லை
மேலும் படிங்க: வைரலாகும் விராட் கோலியின் 10ஆம் வகுப்பு மதிப்பெண்.. எவ்வளவு தெரியுமா?