இந்தியாவிற்கு எதிரான தாக்குதல்களில் பாகிஸ்தான் பயன்படுத்திய ட்ரோன்களை துருக்கி வழங்கியது. மேலும், அஜர்பைஜான் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்துள்ளது. எனவே, இந்த இரண்டு நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சூழலில் ஆசியாவின் மிகப்பெரிய பழம் மற்றும் காய்கறி சந்தையான வடக்கு டெல்லியின் ஆசாத்பூர் மண்டி, துருக்கியில் இருந்து ஆப்பிள் இறக்குமதியை நிறுத்த முடிவு செய்துள்ளது. ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலம் புனே-வைச் […]
