யூபியா,
7-வது ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி அருணாசலபிரதேசத்தில் உள்ள யூபியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, மாலத்தீவை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் மாலத்தீவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
முன்னதாக நடந்த மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் வங்காளதேச அணி 2-1 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது. நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியா – வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
Related Tags :