DigiLocker: உங்கள் முக்கிய ஆவணங்களை டிஜிலாக்கர் மூலம் பாதுகாப்பது எப்படி? முழு செயல்முறை இதோ

DigiLocker: பல அத்தியாவசிய பணிகளை செய்யவும், நமது அடையாளத்தின் அங்கீகாரமாகவும், அரசாங்க திட்டங்களின் பலன்களை பெறவும், இன்னும் பல பணிகளுக்கும் பல ஆவணங்கள் நமக்கு தேவைப்படிகின்றன. இவற்றை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது மிக அவசியமாகும். ஆனால், சில அவசர காலங்களில், உங்கள் முக்கியமான ஆவணங்களை நீங்கள் பெற முடியாமல் போகலாம். அல்லது, அவை உங்களிடம் இல்லாமல் இருக்கலாம். 

போர், தொற்றுநோய்கள் போன்ற நிச்சயமற்ற சூழ்நிலைகளில், உங்கள் முக்கியமான அடையாள மற்றும் நிதி ஆவணங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் உங்களால் அவற்றை அணுக முடியும் நிலையில் அவை இருக்க வேண்டும். மேலும், இந்த ஆவணங்களை தவறவிடுவது சிக்கலை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் அவை பல அன்றாட நடவடிக்கைகளுக்கு அவசியமானவையாக இருக்கின்றன.

Aadhaar Card, PAN, Voter ID, Passport: உங்கள் முக்கியமான ஆவணங்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்வது?

ஆதார், பான், வாக்காளர் ஐடி, பாஸ்போர்ட் போன்ற உங்கள் அனைத்து ஆவணங்களின் டிஜிட்டல் நகல் உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த ஆவணங்களை டிஜிலாக்கர் போன்ற கிளவுட் அடிப்படையிலான பயன்பாட்டில் வைத்திருக்கலாம். மேலும், இந்த ஆவணங்களின் ஃபிசிக்கல் காபீஸ், அதாவது உண்மையான ஆவணங்கள் ஒரே இடத்தில், ஒரே பையில் பத்திரமாக இருப்பதையும் உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். இதன் மூலம் அனைத்து ஆவணங்களையும் ஒரே நேரத்தில் பெறுவதில் சிரமம் ஏற்படாது. 

DigiLocker: டிஜிலாக்கர் மூலம் ஆவணங்களை பாதுகாப்பது எப்படி?

டிஜிலாக்கர் என்பது முக்கியமான டிஜிட்டல் ஆவணங்களை பாதுகாப்பாக சேமிப்பதற்கும், பகிர்வதற்கும், சரிபார்ப்பதற்கும் அதாவது வெரிஃபை செய்வதற்குமான ஒரு கிளவுட் அடிப்படையிலான தளமாகும். இது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) ஒரு முயற்சியாகும்.

டிஜிலாக்கரில் ஆவணங்களைச் சேமிக்க நீங்கள் பின்பற்றக்கூடிய வழிமுறையை இங்கே காணலாம்:

ஸ்டெப் 1: டிஜிலாக்கர் வலைத்தளத்திற்கு செல்லவும், அல்லது உங்கள் ஸ்மார்ட்போனில் டிஜிலாக்கர் செயலியை பதிவிறக்கவும்.
ஸ்டெப் 2: உங்களிடம் ஏற்கனவே கணக்கு இருந்தால் லாக் இன் செய்யவும், அல்லது புதிய கணக்கை உருவாக்கவும்.
ஸ்டெப் 3: நீங்கள் விரும்பினால் ஆதாரை இணைக்கவும் (இது விருப்பத்திற்குரியது). இது ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் பான் கார்டுகள் போன்ற அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணங்களை அணுக உங்களை அனுமதிக்கும்.
ஸ்டெப் 4: ‘Upload Documents’ என்பதைக் கிளிக் செய்து உங்கள் சாதனத்திலிருந்து கோப்புகளைப் பதிவேற்றவும். சான்றிதழ்கள் அல்லது மதிப்பெண் பட்டியல்கள் போன்ற குறிப்பிட்ட ஆவணங்களையும் நீங்கள் இதில் தேடலாம். மேலும் சிபிஎஸ்இ போன்ற தொடர்புடைய வழங்குநர்களிடமிருந்து ஆவணங்களை உங்களுக்காகப் பெற டிஜிலாக்கருக்கு ஒப்புதல் அளிக்கலாம்.

டிஜிலாக்கர் தளத்திலும் இந்தக் கோப்புகளைப் பகிரலாம். டிஜிலாக்கரில் அதிகபட்ச ஏற்றுக்கொள்ளத்தக்க அளவு 10 எம்பி என்பதால், கோப்புகள் 10 எம்பிக்குக் குறைவாக இருப்பதை உறுதிசெய்ய நினைவில் கொள்ளுங்கள்.

டிஜிலாக்கரைப் பயன்படுத்துவதன் நன்மைகள்

அணுகல்தன்மை: அவசரநிலைகளுக்குத் தயாராக இருக்க உங்களை அனுமதிக்கும் வகையில், இந்த பதிவுகளை நீங்கள் எந்த நேரத்திலும் எங்கிருந்தும் அணுகலாம். கூடுதலாக, இந்த ஆவணங்களை உங்களுடன் அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

பாதுகாப்பானது: டிஜிலாக்கரில் இந்த ஆவணங்களை பாதுகாப்பாக சேமிக்க முடியும். இதன் மூலம் இழப்பு அல்லது சேதத்தைத் தடுக்கலாம்.

சரிபார்ப்பு: டிஜிலாக்கரில் கல்வி நிறுவனங்களிலிருந்து பெறப்படும் ஆவணங்கள் சரிபார்ப்பை (verification) வழங்குகின்றன. மேலும் அவை அதிகாரப்பூர்வ சான்றுகளாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

டிஜிலாக்கர் உங்கள் ஆவணங்களைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்பான மற்றும் வசதியான வழியை வழங்குகிறது. மேலும் குடிமக்கள் தங்கள் ஆவணங்களை டிஜிட்டல் முறையில் திறமையாக நிர்வகிக்க அதிகாரம் அளிக்கிறது. டிஜிலாக்கர் ஆவணங்கள் நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இது ஆவண சேமிப்பு, பகிர்வு மற்றும் சரிபார்ப்பு செயல்முறையை நெறிப்படுத்துகிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.