Air Conditioner Tips: கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வருவதால், ஏர் கண்டிஷனர் (ஏசி) தேவையும் தற்போது அதிகரித்துள்ளது. கூலர், பேன் கொடுக்காத குளிர்ந்த காற்றை ஏசி தருகிறது. மேலும் ஏசி போட்ட சில மணி நேரங்களில் நமது அறை குளிர்விடும். அதுமட்டுமின்றி இந்த ஏசி மக்களுக்கு வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் மின்சாரக் கட்டணத்தை குறித்த கவலைப்பட்டு ஏசியை சரியாக நமது தேவைக்கேற்ப பயன்படுத்தத் தயங்குகிறோம். நீங்கள் மின்சாரக் கட்டணத்தைக் குறைவாக பெற்று, போதுமான குளிர்ச்சியை விரும்பினால் சில எளிய முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இதைச் செய்யலாம்.
ஏசியின் சரியான வெப்பநிலை | Correct temperature of AC:
இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஏசியை சரியான வெப்பநிலையில் இயக்குவதே ஆகும். குறைந்த வெப்பநிலையில் ஏசியை இயக்குவது அறையை விரைவாக குளிர்விக்கும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் இது மின்சார நுகர்வை அதிகரிப்பதுடன் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடும். இந்நிலையில் நிபுணர்களின் கூற்றுப்படி, 24-26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை சரியான தேர்வாகும். இந்த வெப்பநிலை விரைவாக அறையை குளிர்விக்கிறது மற்றும் அதிக மின்சாரத்தையும் எடுத்துக் கொள்ளாது. எனவே முடிந்தவரை உங்களின் ஏசியை 24-26 டிகிரி செல்சியஸ் இல் வைத்திருக்கவும்.
அறையை இன்சுலேட் செய்யவும்:
இரண்டாவது முக்கியமான விஷயம் என்னவென்றால் அறையை இன்சுலேட் செய்வது கட்டாயம் ஆகும். உங்கள் அறையின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் சரியாக மூடப்பட்டிருப்பதையும், எங்கிருந்தும் காற்று கசிவு ஏற்படாமல் இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஜன்னல்களில் இடைவெளிகள் இருந்தால், அவற்றை மூடி, கதவுகளுக்கு அடியில் துணி வைத்து அடைக்கவும். பகலில் நேரடி சூரிய ஒளி அறைக்குள் நுழையாதவாறு திரைச்சீலைகளைப் பயன்படுத்துங்கள், இது அறையை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
ஏசி பில்டரை சுத்தம் செய்யவும்:
மூன்றாவது விஷயம் என்னவென்றால், ஏசி பில்டரை தவறாமல் சுத்தம் செய்யவும். அழுக்கு நிறைந்த பில்டர்கள் ஏசியின் குளிரூட்டும் திறனைக் குறைத்து மோட்டாரில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன, இது மின் நுகர்வை அதிகரிக்கும். எனவே உங்கள் ஏசி பில்டரை மாதத்திற்கு ஒரு முறையாவது கட்டாயம் சுத்தம் செய்யவும் .
மின் விசிறியின் பயன்பாடு:
ஏசியுடன் கூடிய மின்விசிறியைப் பயன்படுத்துவதால் அறை முழுவதும் குளிர்ந்த காற்று விரைவாகப் பரவுகிறது, இதனால் அறை விரைவாக குளிர்ச்சியடைகிறது மற்றும் ஏசியை குறைந்த நேரம் இயக்க வேண்டியிருக்கும். நீங்கள் அறையில் இருக்கும்போது மின்விசிறியை இயக்கவும், வெளியே செல்லும்போது அதை அணைத்துவிடவும்.
சரியான அளவு கொண்ட ஏசி பயன்படுத்தவும்:
சரியான அளவு ஏசியை பயன்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும். அறையின் அளவிற்கு ஏற்ப ஏசி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மிகச் சிறிய ஏசி அறையை சரியாக குளிர்விக்க முடியாது, மேலும் மிகப் பெரிய ஏசி அதிக மின்சாரத்தை நுகரும். மேலும் ஏசியை தவறாமல் சர்வீஸ் செய்து வரவும்.