பாஜக ‘ஸ்லீப்பிங் செல்லில்’ இடம்பெற சசி தரூர் முயற்சி – கேரள சிபிஐ விமர்சனம்

திருவனந்தபுரம்: “காங்கிரஸுக்குள் இருக்கும் பாஜகவின் ஸ்லீப்பர் செல்லில் இடம்பிடிக்க சசி தரூர் முயற்சி செய்கிறார்.” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் பினோய் விஸ்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “பயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு யுத்தத்தை பாஜக அரசியல் ஆதாய வேட்டையாக பயன்படுத்துகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் பாஜக ஸ்லீப்பிங் செல் இருப்பதாக ராகுல் காந்தி சொல்வது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. காங்கிரஸுக்குள் இருக்கும் பாஜகவின் ஸ்லீப்பர் செல்லில் இடம்பிடிக்க சசி தரூர் முயற்சி செய்கிறார்.பாஜகவுக்கு ஒவ்வொரு நகர்வையும் அரசியல் ஆதாயத்துக்காக எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துள்ளது.” எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக எல்லை தாண்​டிய தீவிர​வாதத்தை ஊக்​கு​வித்து வரும் பாகிஸ்​தான் குறித்​து, உலக நாடுகளின் தலைவர்களிடம் ஆதா​ரத்துடன் விளக்கும் விதமாக ரவிசங்​கர் பிர​சாத், சசிதரூர், கனி​மொழி உட்பட 7 பேர் தலைமை​யில் எம்​.பி.க்​கள் குழுக்​களை மத்​திய அரசு அமைத்​தது. இந்த குழு​வினர் பிரிட்​டன், வளை​குடா நாடு​கள் உட்பட பல்​வேறு நாடு​களுக்கும் 10 நாட்கள் பயணம் மேற்கொண்டு, இந்​தி​யா​வின் நிலை குறித்து விளக்க உள்ளனர்.

தீவிரவாதிகளுக்கு தஞ்சம் அளிப்பது, நிதிஉதவி வழங்குவது, எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு உதவி செய்வது என தொடர்ந்து பல ஆண்டுகளாகவே தீவிரவாதத்துக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்பட்டு வருவது குறித்து உலக நாடுகளிடம் ஆதா​ரங்​களு​டன் விளக்க மத்​திய அரசு அமைத்துள்ள இந்தக் குழுக்களுக்கு ரவிசங்​கர் பிர​சாத், வைஜெ யந்த் பாண்​டா (பாஜக), சசி தரூர் (காங்​கிரஸ்), கனி​மொழி (திமுக), சஞ்​சய் குமார் ஜா (ஐஜத), சுப்​ரியா சுலே (என்சிபி – சரத்​ப​வார்), ஸ்ரீ​காந்த் ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா) ஆகிய 7 எம்.பி.க்களும் அந்த குழுக்​களுக்கு தலைமை வகிப்​பார்​கள்.

ஒவ்வொரு குழு​விலும் பாஜக, காங்​கிரஸ், திமுக, திரிணமூல், ஐஜத, என்​சிபி (சரத் பவார்), பிஜு ஜனதா தளம், சிவசேனா (உத்​தவ்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை சேர்ந்த 5 முதல் 8 எம்​.பி.க்​கள் இடம்​பெறு​வார்​கள். வெளி​யுறவு அமைச்​சகத்​தின் மூத்த அதி​காரி ஒரு​வரும் இக்குழுவில் இடம்​பெறுவார். இந்த குழுக்​களின் ஒருங்​கிணைப்​பாள​ராக நாடாளு​மன்ற விவ​கார துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு இருப்​பார்.

இந்தக் குழுவில் சசி தரூர் இடம்பெற்றதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கேரள சிபிஐ செயலர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.