ஹைதராபாத்தில் பயங்கர தீ விபத்து; சிறுவர்கள், பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி, தலைவர்கள் இரங்கல்

ஹைதராபாத்: தெலங்​கானா மாநில தலைநகர் ஹைத​ரா​பாத்​தில் நேற்று அதி​காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 சிறு​வர்​கள், 5 பெண்​கள் உட்பட 17 பேர் உயி​ரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சம், மாநில அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹைத​ரா​பாத்​தில் புகழ்​பெற்ற சார்​மி​னார் அருகே குல்​சார் ஹவுஸ் என்ற வணிக வளாகம் செயல்​படு​கிறது. இந்த வளாகத்​தின் தரைதளத்​தில் நகைக் கடைகளும், மேல்​தளங்​களில் வீடு​களும் உள்​ளன. இங்கு நேற்று அதி​காலை 4 மணி அளவில் மின் கசிவு காரண​மாக தீ விபத்து ஏற்​பட்​டது.

சிறிது நேரத்​துக்​குள் வணிக வளாகம் முழு​வதும் தீ மளமளவென்று பரவியது. கட்​டிடம் முழு​வதும் தீயும், புகை​யு​மாக மாறியது. அதி​காலை நேரம் என்​ப​தால் அனை​வரும் தூக்​கத்​தில் இருந்​தனர். இதனால் பலர் மூச்​சு திணறி மயக்​கம் அடைந்​தனர். இதற்கிடையே, தகவல் கிடைத்து போலீ​ஸார், தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்​பு படையினர் விரைந்து வந்து மீட்​பு பணி​யில் ஈடு​பட்​டனர். 10 தீயணைப்பு வாக​னங்​கள், கிரேன்​கள் உதவி​யுடன் சுமார் 1 மணி நேரத்​துக்கு மேலாக போராடி தீ அணைக்​கப்​பட்​டது. இதற்​குள் வணிக வளாகத்​தின் மேல்​தளங்​களில் இருந்த 8 சிறு​வர்​கள், 5 பெண்​கள் உட்பட 17 பேர்உயி​ரிழந்​தனர். 10-க்​கும் மேற்​பட்​டோர் பலத்த தீக்​கா​யம் அடைந்​தனர். அருகில் உள்ள அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வ​மனை​களில் அவர்​கள் அனு​ம​திக்​கப்​பட்டுள்​ளனர். அவர்​களில் சிலரது நிலைமை கவலைக்​கிட​மாக உள்​ளது.

இதுகுறித்து போலீ​ஸார் கூறிய​தாவது: தீ விபத்து ஏற்​பட்ட குல்​சார் ஹவுஸ் வணிக வளாகத்​தின் தரை தளத்​தில் நகைக் கடைகள் உள்​ளன. அதற்கு மேல் உள்ள 2 தளங்​களில் வீடு​கள் உள்​ளன. தரை ​தளத்​தில் நகைக்​கடைகள் நடத்​தும் தொழில​திபர்​கள், ஊழியர்​கள் தங்​கள் குடும்​பத்​தினருடன் மேல் தளங்​களில் உள்ள வீடு​களில் வசித்​தனர். தீ விபத்து ஏற்​பட்​டதும் போலீ​ஸாரும், தீயணைப்பு படை வீரர்​களும் விரைந்து சென்று மீட்​பு பணி​யில் ஈடு​பட்​டனர். சுமார் 30 பேரை பத்​திர​மாக மீட்​டோம். கரும்​பு​கை​யால் மூச்சு திணறி வீடு​களுக்குள் மயங்கி விழுந்​தவர்​கள் தீயில் சிக்கி உயி​ரிழந்​துள்​ளனர். இவ்​வாறு போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

மாநில அமைச்​சர் பொன்​னம் பிர​பாகர் கூறும்​போது, “மின் கசி​வால் தீ விபத்துஏற்​பட்டுள்ளது. போலீ​ஸாரும், தீயணைப்பு படை வீரர்​களும் விரைந்து செயல்​பட்டனர். தீ விபத்து குறித்து உயர்​நிலை விசா​ரணைக்கு உத்​தர​விடப்​பட்டுள்ளது’’ என்று தெரி​வித்​தார்.

மத்திய, மாநில அரசுகள் நிவாரணம்: பிரதமர் மோடி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், ‘ஹைத​ரா​பாத் தீ விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்​தேன். உயி​ரிழந்​தவர்​களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்​திக்​கிறேன். அவர்​களது குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்து கொள்​கிறேன். உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பங்​களுக்கு தலா ரூ.2 லட்​சம், காயமடைந்​தவர்​களுக்கு தலா ரூ.50,000 இழப்​பீடு வழங்​கப்​படும்’ என்று தெரி​வித்​துள்​ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று தெலங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது. விபத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பங்​களுக்கு தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்டி ஆழ்ந்த இரங்​கல் தெரி​வித்துள்​ளார். உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, வருத்தத்தை தெரி​வித்​தார். காயமடைந்​தவர்​களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்​பாடு செய்​யு​மாறு அமைச்​சர்​களுக்கு அவர் உத்​தர​விட்டுள்ளார்.

தீ விபத்து நடந்த இடத்தில் மத்​திய அமைச்​சர் கிஷன் ரெட்டி ஆய்வு செய்​தார்.பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் பேசிய அவர், ‘‘சிறிய அளவிலான விபத்​து என்​றாலும்​, உயிர்​ச்​ சேதம்​ அதி​க​மாக உள்​ளது. தீயணைப்​பு​ துறை நவீனமய​மாக்​கப்​பட்​டு இருந்​​தால்​ பல உயிர்​களை காப்​​பாற்​றி இருக்​க முடி​யும்​. இதுகுறித்​து பிரதமரிடம்​ எடுத்​துரைப்​பேன்’’ என்றார்​. முன்​னாள் முதல்​வர் சந்​திரசேகர ராவ் உட்பட பல்​வேறு கட்​சிகளின் தலை​வர்​களும் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.