அஜித் குமார் நடித்திருந்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகியிருந்தது. இப்படத்தில் அஜித்தின் சில மாஸ் காட்சிகளுக்கு இளையராஜாவின் சில பாடல்களைப் பயன்படுத்தியிருந்தனர்.
அந்தப் பாடல்களுக்கு முறையான உரிமத்தைப் பெறவில்லை என இளையராஜா ராயல்டி கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக அப்போது கங்கை அமரன் ஜி.வி.பிரகாஷ் குறித்து காட்டமாகப் பேசியிருந்தார்.
சமீபத்திய நிகழ்வு ஒன்றில் தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன், கங்கை அமரன் குறித்தும், ஜி.வி.பிரகாஷ் குறித்தும் பேசியிருக்கிறார்.
தேனப்பன் பேசியபோது, “சமீபத்துல கங்கை அமரன் சார் ‘ஜி.வி. பிரகாஷ் 7 கோடி ருபாய் சம்பளம் வாங்குறாரு. ஆனா, இளையராஜா பாடல்கள்தான் பயன்படுத்துறீங்க’னு பேசியிருந்தாரு.
ஜி.வி. பிரகாஷுக்கு வேலை தெரியாதங்கிற மாதிரி பேசியிருந்தாரு.
ஜி.வி. பிரகாஷ் அவ்வளவு தங்கமான மனுஷன். அவர் 7 கோடி வாங்குறது கங்கை அமரனுக்கு வயிற்தெரிச்சலானு தெரியல. எத்தனையோ பிரச்னைகள்ல ஜி.வி. பிரகாஷ் விட்டுக் கொடுத்திருக்காரு.

சமீபத்துலகூட ஒரு படம் ரிலீஸ் சமயத்துல ‘என்னுடைய சம்பளத்துக்காகப் படம் நிக்குதா’னு கேட்டு சம்பளத்தை விட்டுக் கொடுத்துப் படத்தை ரிலீஸ் பண்ண உதவியாக இருந்தாரு.
‘குட் பேட் அக்லி’ படத்துல ராஜா சார் பாடலை யூஸ் பண்ணினது ஜி.வி. பிரகாஷின் தவறு கிடையாது. அது இயக்குநரின் விருப்பம்.
‘பிதாமகன்’ படத்துலகூட சிம்ரன் நடனமாடுற பாடல்ல எம்.எஸ்.வி. சார் பாடலைத்தான் பயன்படுத்தியிருப்பாங்க. அதுக்குனு அவருக்கு வேலை தெரியாது’னு சொல்ல முடியுமா!” எனக் கூறினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…