இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சமீபத்தில் திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். 36 வயதான அவர், இன்னும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் பயணிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓய்வை அறிவித்தது அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது இந்த முடிவிற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது ரசிகர்களும், விராட் கோலியின் உடல் தகுதியை மிஞ்ச ஆளே கிடையாது என்றும் அப்படி இருக்கையில் அவர் ஏன் ஓய்வை அறிவித்தார் என புலம்பி வருகின்றனர்.
இந்த நிலையில், விராட் கோலி குறித்து முன்னாள் அதிரடி வீரர் விரேந்திர சேவாக் பேசி இருக்கிறார். அவர் பேசியதாவது, விராட் கோலி எப்போது ரன்கள் அடிக்க வேண்டும் என்ற பசியுடன் இருப்பவர். அதனால்தான் அவர் மற்ற வீரர்களிடம் இருந்து சற்று மாறுபட்டு இருக்கிறார். தொடர்ந்து ஒரே மாதிரியான வாழ்க்கை முறையை கிரிக்கெட்டுக்காக பின்பற்றுபவர் விராட் கோலி.
விராட் கோலி கடுமையாக உழைப்பவர். தொடர்ந்து ரன்களை அடிக்கக் கூடியவர். 36 வயதை கடந்தாலும் அவரது உடல் தகுதியை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. முக்கால்வாசி வீரர்கள் உடல் தகுதி என்று வந்துவிட்டால் விராட் கோலியின் பின்னால் தான் இருப்பார்கள். இப்படி இருக்கையில் அவர் மிகவும் முன்னதாகவே ஓய்வு முடிவை எடுத்துவிட்டார் என்று தான் நான் நினைக்கிறேன். அவர் நினைத்திருந்தால், கண்டிப்பாக இன்னும் இரண்டு ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கலாம். ஆனால் அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
விராட் கோலி நல்ல உடல் தகுதி உடன் தான் இருக்கிறார். ஆனால் அவர் சமீபமாக ஆஃப்சைடு செல்லும் பந்துக்கு திணறி வந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் அப்படியான பந்திற்கு தொடர்ந்து ஆட்டமிழந்தார். அவரால் அந்த வீக்னஸில் இருந்து மீண்டு வர முடியவில்லை என்றும் அவர் கேப்டன் பதவி கேட்டு அதை பிசிசிஐ மறுத்துமே அவரது ஓய்வு முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.
மேலும் படிங்க: “தோனி ஒரு தேசத்துரோகி”.. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்.. பின்னணி என்ன?
மேலும் படிங்க: பஞ்சாப் கிங்ஸ் மிரட்டல் வெற்றி… ராஜஸ்தான் படுமோசம் – பிளே ஆப் ரேஸ் எப்படி இருக்கு?